games

img

விளையாட்டு செய்திகள்

டி-20 உலகக்கோப்பை 2024
இந்தியாவை தாக்குப்பிடிக்குமா ஆப்கானிஸ்தான்?
இன்று “சூப்பர் 8” சுற்று ஆட்டம்

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கூட்டாக நடைபெற்று வரும் 9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20  தொடரின் லீக் ஆட்டங்கள் செவ்வா யன்று நிறைவு பெற்ற நிலையில், புதனன்று “சூப்பர் 8” சுற்று ஆட்டங்கள் தொடங்கின. 

தொடர்ந்து வியாழனன்று நடைபெறும் 3ஆவது “சூப்பர் 8”  சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆப்கா னிஸ்தான் (“குரூப் 1”) அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிட அந்தஸ்துடன் அரையிறு திக்கு முன்னேறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள்

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணி களுக்கு இடையேயான “சூப்பர் 8”  சுற்று ஆட்டத்திற்கு முன்னதாக “குரூப் 2” பிரிவில் உள்ள இங்கி லாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன. இரு அணி களும் சரிசம அளவிலான பலத்தில் இருப்பதால் இந்த ஆட்டமும் பர பரப்பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பையில் நியூசிலாந்து படுதோல்வி எதிரொலி கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்த வில்லியம்சன்

கிரிக்கெட் உலகின் நட்சத்திர அணிகளில் ஒன்றான நியூசி லாந்து அணி 9ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை தொடரில் படுதோல்வியுடன் லீக் சுற்றோடு வெளியேறியது. முன்னணி அணிகள் “சூப்பர் 8” சுற்றுக்கு முன்னேறிய நிலையில், நியூசிலாந்து மட்டும் வெளியேறியதற்கு அந்நாட்டு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், படுதோல்விக்கு பொறுப்பேற்று டி-20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கான கேப்டன் பொறுப்பை  வில்லியம்சன் ராஜினாமா செய்துள்ளார். மேலும் 2024-25ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தையும் வில்லியம்சன் நிராகரித்துள்ளார். தேசிய அணிக்கான ஒப்பந்தத்தில் இருந்து விலகினாலும் சிறப்பு பிரதிநிதித்துவத்தின் மூலம் சர்வதேச தொடர்களுக்கான நியூசிலாந்து அணியில் அவரை தேர்வு செய்ய தயாராக இருப்பதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

இங்கிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள்
இடம் : லூசியா, மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : காலை 6:00 மணி

இந்தியா - ஆப்கானிஸ்தான்
இடம் : பார்படாஸ், மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : இரவு 8:00 மணி

ஐரோப்பிய கோப்பை கால்பந்து - 2024

ஸ்லோவேனியா - ஜெர்மனி
இடம் : மூனிச், ஜெர்மனி
நேரம் : மாலை 6:30 மணி

டென்மார்க் - இங்கிலாந்து
இடம் : வால்ட்ஸ்டேடியன், ஜெர்மனி
நேரம் : இரவு 9:30 மணி