games

img

கவுதம் கம்பீருக்கு வலுக்கும் எதிர்ப்பு

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், பாஜக எம்பி யுமான கவுதம் கம்பீர் கடந்த சில நாட் களாக தொடர்ந்து சர்ச்சை கருத்துக் களை தெரிவித்து விளையாட்டு உல கில் பெரும் எதிர்ப்பை சந்தித்து வரு கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி யை பற்றி அதிகம் பேசி வந்த கவு தம் கம்பீர் தற்போது உள்நாட்டிற்கு ள்ளேயே வித்தியாசமான கருத்துக்கள் மூலம் புகைச்சலை ஏற்படுத்தி வருகிறார். திங்களன்று ஒரு வித்தியாசமான அதாவது சரிவர புரியாத கருத்து ஒன்றை கூறியுள்ளார். அது யாதெனில், ”விராட் கோலி சமீபத்தில் சதம் அடித்த போது அவரை நாடே கொண்டாடி யது. அதே போட்டியில் சிறிய நகர மான மீரட்டில் இருந்து வந்த புவ னேஷ்வர் குமார் 5 விக்கெட்களை எடுத்தார். ஆனால் கமெண்டரியில் என்னைத் தவிர யாரும் அவரைப் பற்றி  பேசவில்லை. கோலி சதத்தை மட்டும் தான் நாடே கொண்டாடியது. ஹீரோ வாக ஒருவரை கொண்டாடுவதில் இருந்து இந்தியா வெளிவர வேண்டும். ஊடகங்கள் ஒருவரை தொடர்ந்து கொண்டாடும் போது காலப்போக்கில் அது பிராண்டாக மாறிவிடும். அது தான் 1983ல் நடந்தது. 2007 மற்றும் 2011லும் நடந்தது” எனக்கூறினார். கம்பீரின் இந்த கருத்தை எந்த விதத்தில் எடுத்துக்கொள்வது என புரியவில்லை ஆனால் அடுத்த சில நிமிடங்களில் இந்த விவகாரம் விளையாட்டு உல கில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.  சமூக வலைத்தளங்களில் கவுதம் கம்பீருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தற்போது தேவையா?

ஆசியக் கோப்பையில் இந்தியா பார்ம் பிரச்சனையில் சிக்கி படுதோல்வி யுடன் “சூப்பர் 4” சுற்றிலேயே வெளியேறியது. அடுத்து ஒரு மாதத்தில் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், பல மூத்த வீரர்கள் இந்திய அணியை பார்ம் பிரச்சனையில் இருந்து மீட்க ஆலோசனைகளை வழங்கி  வருகின்றனர். ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு மூத்த வீரர் என்ற அடிப்படை யில் கம்பீர் போதுமான ஆலோசனை வழங்குவதை விட்டுவிட்டு தேவையில்லாத வெறுப்பு கருத்துக்களை கூறியுள்ளார். தற்போது இந்திய கிரிக்கெட் உல கத்திற்கு இந்த கருத்து தேவையில்லை. இந்த கருத்து எதற்கு பயன்படப்போகிறது? என்ற கேள்விதான் எழுகிறது.
 

;