games

img

ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி போட்டி?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் (நியூ சிலாந்து) பதவிக்காலம் நவம்பர் மாதம் முடிவடை யவுள்ள நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.  இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப் டன் சவுரவ் கங்குலி  ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டி யிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கங்குலி ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட வேண் டும் என பல உறுப்பினர் கள் விருப்பம் தெரிவித்துள் ளதாகவும் தகவல் வெளி யாகியுள்ளது. ஒருவேளை கங்குலி ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டால் பிசி சிஐ செயலாளராக பதவி வகிக்கும் ஜெய் ஷா தலைவ ராக வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது. ஜெய் ஷா ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் மகனாவார்.

புதிய விதியால் குழப்பம் 

ஐசிசி தலைவராக மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை இல்லை என்றும், 51% வாக்குகள் பெற்றாலே போதும் என்றும் புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதியால் சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. காரணம் ஐசிசி தலைவர் மற்றும் இதர உறுப்பினர்கள் பதவிகளுக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வசதிபடைத்த கிரிக்கெட் வாரியங்கள் மட்டுமே இனி ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்புகள் உருவாகலாம்.