games

img

விளையாட்டு செய்திகள்

கிரிக்கெட் உலகக்கோப்பையில் முதல் வெற்றியை ருசித்த உகாண்டா

9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடை பெற்று வருகிறது. வியாழனன்று நடைபெற்ற குரூப் சி பிரிவிற்கான லீக் ஆட்டத்தில் உகாண்டா  - பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. டாஸ்  வென்ற உகாண்டா அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி, உகாண்டா அணியின் அசத்த லான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.1 ஓவர்களில் 77 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.  78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிதான இலக்குடன் களமிறங்கிய உகாண்டா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை (78) எளிதாக எட்டி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் வெற்றியை ருசித்தது.

மேலும் மோசமடையும் இலங்கை அணி  நிலைமை

கிரிக்கெட் உலகில் அதிரடிக்கு பெயர் பெற்ற அணியும், முன்னாள் சாம்பியனுமான இலங்கை  கடந்த 2 ஆண்டு காலமாக மிக மோசமான அளவில்  சொதப்பி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.  தொடர் தோல்விகளால் இலங்கை அணி இரண்டாம் தர அணியாக கீழே இறங்கிய நிலையில், பொருளாதார நெருக்கடி, போதுமான அளவில் வீரர்கள் இல்லாமை யால்  திணறி வருகிறோம் என 2 காரணங்களைக் கூறி அந்நாட்டு ரசிகர்களிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் தப்பித்து வருகிறது.  தற்போது பொருளாதார நிலைமை மற்றும் அணியில் போதுமான அளவில் வீரர்கள் இருந்தும் 9ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் மிக மோசமான அளவில் தோல்வியடைந்துள்ளது. இந்த தோல்வியால் இலங்கை அணியை உள்நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

டி20 லீக் மனநிலையில்...

இலங்கை அணி வீரர்கள் கிரிக்கெட் விளையாடும் பொழுது ஆட்டத்தின் தன்மையை உணர்ந்து விளையாட முயற்சிக்காமல் உள்ளனர். அதாவது ஐபிஎல் போன்ற உள்ளூர் டி-20 தொடர்களின் மனநிலையிலேயே விளையாடி வருகின்றனர். சர்வதேச போட்டி வேறு, டி20 லீக் வேறு என்பதை உணராமல் விளையாடுவதே இலங்கை அணியின் மோசமான சரிவுக்கு காரணம் ஆகும். இதன் காரணமாகவே சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இலங்கை அடி மேல் அடி வாங்கி வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இங்கிலாந்து அணி நிர்வாகங்கள், தனது அணி வீரர்களுக்கு சர்வதேச அணியில் விளையாடுவதற்காக தனி கட்டுப்பாடுகளை விதிக்கும். அந்த கட்டுப்பாடுகள் மிக மோசமாக இருக்கும். என்ற நிலையில், இதுபோன்ற கட்டுப்பாடுகளை இலங்கை அணி விதிக்காததே சர்வதேச அரங்கில் அந்த அணியின் நிலைமை மோசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டம்

இடம் : நியூயார்க், அமெரிக்கா
நேரம் : இரவு 8:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம்)

கனடா - அயர்லாந்து