games

img

விளையாட்டு...

ஆஷஸ் : மீண்டும் எழுச்சி பெறுமா இங்கிலாந்து? 
இன்று 4-வது டெஸ்ட் தொடக்கம்

பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடரான ஆஷஸ் தொடரின் நடப் பாண்டிற்கான சீசன் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.  5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 3 ஆட்டங் களின் முடிவில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ள நிலையில், செவ்வாயன்று 4-வது டெஸ்ட் போட்டி தொடங்கு கிறது. தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், மீண்டும் பதிலடியுடன் தொடரை 2-2 என்ற கணக்கில் சமனில் வைத்து கடைசி டெஸ்ட் போட்டியில் கோப்பைக்கான பலப்பரீட்சை வைக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் என இரு அணிகளும் வெற்றி மீது குறியாக களமிறங்குவதால், 4-வது டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து
நேரம் : மதியம் 3:30 மணி
இடம் : ஓல்ட் டிராபோர்ட், மான்செஸ்டர்
சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் (ஒடிடி)

யாருப்பா இந்த அட்மின்?
மிக நெருக்கமாகும் விம்பிள்டன் - தமிழ்

146 ஆண்டு பாரம்பரிய டென்னிஸ் தொடரான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் கடந்த 2 ஆண்டு காலமாக தமிழ் சினிமா ஸ்டைல் சொற்கள் மூலம் தமிழ் மொழிக்கு அடையாளம் வழங்கப்பட்டு கவுரவித்து வருகிறது.  கடந்த ஆண்டு (2022) விம்பிள்டன் போட்டி நடைபெறும் இடத்திற்கு டென்னிஸ் உலகின் ஜாம்பவானும், 20 கிராண்ட்ஸ்லாம்  பட்டம் வென்ற சுவிட்சர்லாந்து நாட்டவரு மான ரோஜர் பெடரர் வந்த பொழுது விம்பிள்டன் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், கடந்த 2021-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய “மாஸ்டர்” திரைப்படத்தின் “வாத்தி கம்மிங்” பாடலின் தொடக்க வரியை பதிவிட்டு வரவேற்பு அளித்தது. நடப்பாண்டு சீசனில் அதே ரோஜர் பெடரருக்கு  “தலைவா” என்ற தமிழ் பெயர் மூலம் வரவேற்பு அளித்துள்ளது.  இந்நிலையில், நடப்பு சீசனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் அல்காரஸுக்கு கடந்த 2021-ம் ஆண்டு லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளி யாகிய “மாஸ்டர்” திரைப்படத்தின் பெயரை யும், மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் இருக்கும் காட்சியில், விஜய் இருக்கும் இடத்தில் அல்காரஸை வைத்து சிறப்பு போஸ்டரை பதிவிட்டுள்ளது விம்பிள்டன் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம். யாருப்பா இந்த அட்மின்? விம்பிள்டன் நிர்வாகம் சமூக வலைத்தளங்களில் இப்படி தொடர்ச்சியாக தமிழ் மொழி சார்ந்த பெயர் மற்றும் தமிழ் சினிமாவின் பெயர்கள், பாடல்கள் மூலம்  வரவேற்பு, கொண்டாட்டங்களை பகிர்ந்து வருகிறது. இதன் மூலம் உலகின் தலைசிறந்த விளையாட்டு தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் மூலம் உலகம் முழுவதும் தனிப்பட்ட, வேறொரு வழியில் புதுமையான அங்கீ காரம் கிடைத்து உச்சத்தில் பயணித்து வருகிறது தமிழ்...  ஆனால் ஒரே ஒரு குறை உள்ளது. இந்த தமிழ் மொழியை வைத்து வரவேற்பு மற்றும் கொண்டாட்ட பதிவுகளை செய்யும் விம்பிள்டன் அட்மின் யாரென்று இதுவரை தெரியவில்லை. அவரை பற்றிய கேள்வி அதிகம் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஒளிபரப்பு உரிமையை  கைப்பற்றிய தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ்

விளையாட்டு உலகின் முக்கிய தொடராக இருப்பது உலகக் கோப்பை கால்பந்து தொடராகும். ஆடவர் பிரிவை போல மகளிர் பிரிவு  உலகக்கோப்பை கால்பந்து தொட ரும் பிரபலமாக வளர்ந்து வரும் நிலை யில், மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 9-வது சீசன் ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து நாடுகளில் வியாழனன்று (ஜூலை 20) தொடங்குகிறது. மொத்தம் 32 அணி கள் பங்கேற்கும் இந்த தொடர் 1 மாத காலம் (ஆக., 20) நடைபெறும் இந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இந்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைப் பெற்று டிடி  ஸ்போர்ட்ஸ் (தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ்)  கைப்பற்றியுள்ளது. ஒடிடி உரிமை யை பேன்கோடு (FanCode’s) வாங்கி யுள்ளது.  இந்த உலகக்கோப்பை தொடரில்  இந்திய மகளிர் அணி பங்கேற்க வில்லை. தகுதி சுற்றில் வெளியேறி யது.

;