facebook-round

img

வெட்கமென்றால் கிலோ என்ன விலை என கேட்பார்கள் போல.. - ஆர்.பத்ரி

குடியரசு நாளின் வாகன
அணிவகுப்பில் வஉசி படம்
பொறித்த வாகனத்திற்கு
அனுமதியில்லையென
மறுத்த இவர்கள் தான்
வஉசி யின் கனவை
நிறைவேற்றுகிறார்களாம்..

சிறைக்கு செல்கிற போது
காலில் இரும்பு சங்கிலிகளை
பிணைத்த போது புன்னகைத்துக்
கொண்டே சொன்னார் வஉசி..

"அரும்பொன்னை காலில்
இடுவது அபச்சாரமென்பதால்
இரும்பினை பூட்டி இழுத்துச்
செல்கிறார்கள் போலும்.."

இரு ஜோடி கைதி உடைகளையும்
இரண்டு குல்லாய்களையும்
சிறை வார்டன் வழங்கிய
வேளையில் ஆர்வமுடன்
பெற்று அமைதியாக சொன்னார்..

" நான் அணியும் பட்டாடைகளை
விடவும் கண்ணியமான
உடைகள் இவையென்பதால்
உவப்போடு ஏற்கிறேன்.."

கோவைச் சிறையில்
சணல் கிழிக்கும் வேலையை
செய்ய சொன்னபோதும்
செக்கிழுக்க சொன்னபோதும்
சிரித்துக் கொண்டே ஏற்றார்..

ஏன் சிரிக்கிறாய் என
ஜெயிலர் கேட்டபோது
பதிலுரைத்தார்..
" என்னை அழச் சொல்கிறாயா..
அது எனக்கு தெரியாதே..
தேசபக்தர்கள் என்றுமே
தேசபக்தர்களாகவே தான்
இருப்பார்கள்.."

அவர்தான் வ உ சி..

அவர் பெயரைக்கூட
சொல்ல அருகதையற்ற
இவர்கள், வெட்கமென்றால்
கிலோ என்ன விலை
என கேட்பார்கள் போல..

-ஆர். பத்ரி

;