facebook-round

img

“இது மகாத்மா காந்தியின் இந்தியா அல்ல என்றார்” - ரன்கீனா கர்கர்

தாலிபான்கள் எள் என்றால் எண்ணெயாக இருக்கிறது இந்திய அரசு.

ஆப்கானிஸ்தானின் பர்யப் மாகானத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரன்கீனா கர்கர் அவர்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதி புது தில்லி வந்தார், அவர் ராஜாங்க கடவுச் சீட்டில் பயணம் செய்து வந்தார், அந்த ராஜாங்க கடவுச்சீட்டிற்கு இந்தியாவின் அயல்நாட்டு நுழைவுச்சான்று (விசா) தேவையில்லை.

அவர் புதுதில்லியின் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்தார், ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரும்பிச் செல்வதற்கான பயணச்சீட்டும் அவர் கையில் இருந்தது.

ரன்கீனா கர்கர் அவர்களை 20 மணி நேரம் அலைகழித்து இந்தியாவிற்குள் நுழையவிடாமல் நாட்டில் இருந்து வெளியேற்றியிருக்கிறது மோடி அரசு.

ஏன் மோடி அரசு ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினரை வெளியேற்ற வேண்டும். அவரிடம் ராஜாங்க கடவுச்சீட்டு இருக்கும் போது அவரை மோடி அரசு ஏன் இப்படி கேவலப்படுத்த வேண்டும், ஏனென்றால் ஆப்கான் அரசியல்வாதிகள் யாருக்கும் இந்தியா புகலிடம் தரக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளது தாலிபான், தாலிபான்கள் எள் என்றால் எண்ணெயாக இருக்கிறது இந்திய அரசு.

அவரை புதுதில்லியில் இருந்து துபாய் வழியாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரத்திற்கு நாடு கடத்தியிருக்கிறார்கள், அவர் கையில் இஸ்தான்புலில் இறங்கும் வரை அவரது கடவுச்சீட்டை கொடுக்க மறுத்திருக்கிறார்கள்.

நாட்டை விட்டு வெளியேறும் போது “இது மகாத்மா காந்தியின் இந்தியா அல்ல என்றார்” ரன்கீனா கர்கர்....

-Muthu Krishnan

;