facebook-round

img

ஆர்.எஸ்.எஸ். பெற்ற நன்னடத்தை சான்றிதழ் இதுவே..!!!

வேடிக்கை மனிதரைப்
போல வீழ்ந்தவர்கள் தான்
இன்று வீரம் பேசிகிறார்கள்..

1942 ம் ஆண்டு, காந்தி
‘வெள்ளையனே வெளியேறு’
இயக்கத்தை அறிவித்தபோது, ஆர்.எஸ்.எஸ். தேசபக்தர்கள்
என்ன செய்தார்கள்..

அந்த இயக்கத்தையும் காந்தியையும்
எதிர்த்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு
துணை நின்றது ஆர்.எஸ்.எஸ்.

காந்தி கைது செய்யப்பட்ட அதே நாளில் “காங்கிரஸ் கட்சியின் பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு காட்ட வேண்டாம்” என்று சாவர்க்கர் இந்துக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

அரசுப் பணிகளில் இருக்கும் ‘இந்துக்கள்’ காந்தியின் இயக்கத்தை ஆதரித்து பதவி விலகாமல் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று இந்து மகாசபையின் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

காந்தியின் இயக்கத்தால் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டு விடக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த கோல்வாக்கர் அஞ்சினார். இராணுவத்தைப் போன்ற உடற்பயிற்சி களுக்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. உடனே ஆர்.எஸ்.எஸ். நடத்தி வந்த உடற்பயிற்சியை நிறுத்தி விட்டதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்
கோல்வாக்கர் அறிவித்தார்.

கோல்வாக்கர் ஆர்.எஸ்.எஸ்.
உறுப்பினர் களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான சட்டமறுப்பு இயக்கத்தை ஏற்காமல் சட்டத்துக்கு உடன்பட்டு நிற்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

கோல்வாக்கரின் சுற்றறிக்கையில்,
“சட்டத்துக்கு கீழ் பணிந்து நடக்கும் எந்த அமைப்பும் இப்படித்தான் செயல்பட வேண்டும். நாம் நமது பயிற்சிகளை சீருடை அணி வகுப்பை முழுமையாக நிறுத்தி விட்டோம். காலம் மாறும் என்று நாம் காத்திருக்கப் போவது இல்லை. பயிற்சிகள் தொடர்பாக நமது அமைப்பின் தனிப் பிரிவையே கலைத்து விட்டோம் என்று கூறுகிறது கோல் வாக்கரின் சுற்றறிக்கை.. (ஆதாரம்: வால்டர் கே. ஆன்டர்சன் - ஸ்ரீதர் டி. டாம்ப்லே இணைந்து எழுதிய ஆய்வு நூல் “The Brotherhood in Saffron””)

வெள்ளையனே வெளியேறு
இயக்கம் பற்றி பம்பாய் மாநில உள்துறை நிர்வாக அறிக்கையில்,
"ஆர்.எஸ்.எஸ். 1942 ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு இயக்க’ங்களில் நடந்த கலவரங்களில் பங்கேற்கவில்லை” என்று கூறியது. பிரிட்டிஷ் ஆட்சியிடம் ஆர்.எஸ்.எஸ். பெற்ற நன்னடத்தை
சான்றிதழ் இதுவே..!!! 

;