election2021

img

கட்சிமாறி வந்த 150 பேருக்கு சீட் வழங்குவதா? சொந்த அலுவலகத்தையே கொளுத்திய பாஜகவினர்.... ஹூக்ளியைத் தொடர்ந்து ஜல்பைகுரியிலும் போராட்டம்.....

கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் முதல்கட்ட பாஜக வேட்பாளர்கள்பட்டியல் வெளியான நாளிலிருந்து, சொந்தக் கட்சிக்குள்ளேயே, வெட்டு குத்து ஆரம்பித்து விட்டது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக-வில் உழைத்தவர்களை விட்டுவிட்டு, கடந்தவாரம் திடீரென பாஜக-வில்இணைந்தவர்களுக்கும், கட்சியிலேயே இல்லாதவர் களுக்கும் எம்எல்ஏ சீட் வழங்குவதா? என்று மாநிலம் முழுவதும் பாஜக-வினர் கொந்தளித்து வருகின்றனர். ஆங்காங்கே சொந்தக் கட்சி அலுவலகத்தையே அவர்கள் அடித்து, நொறுக்கிச் சூறையாடி வருகின்றனர்.பழைய மால்டா, அரிஸ்சந்திரப்பூர் ஆகிய இடங்களிலும் இதைப்போன்ற வன்முறைகளை அரங்கேற்றினர். ஜகடால், தெற்கு நாடியா, ரானாகட், சக்டா மற்றும் வடக்கு 24பர்கானா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதிருப்தியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தெற்குப் பகுதிவேட்பாளர்களை மாற்றக்கோரி துர்காபூர் மாவட்ட அலுவலகத்தின் முன்பாகவும் பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூச்பிகார் மாவட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பபேன் ராய் பாஜகவிலிருந்தே விலகி விட்டார். அண்மையில் ஹூக்ளியில் உள்ளபாஜக அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்நிலையில், வடக்குப் பகுதியான ஜல்பைகுரியிலும் கட்சியின் மாவட்ட அலுவலகத்தைச் சூறையாடி, அங்கிருந்த விளம்பரப் பொருட்களுக்கு உள்ளூர் பாஜகவினர் தீ வைத்துள்ளனர். 

மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில், இதுவரை நான்கு கட்டங்களாக283 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 150 வேட்பாளர்கள், அடுத்த கட்சிகளிலிருந்துவிலகி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

;