election2021

img

மேற்குவங்கம்.... 7ஆம் கட்டத்தில் 75.06 சதவீத வாக்குகள் பதிவு.....

கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் 7ஆம் கட்ட தேர்தலில் மாலை 5.31 மணி வரை 75.06 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 

திங்களன்று நடைபெற்ற ஏழாம் கட்ட தேர்தலில் முர்ஷீதாபாத், மேற்கு வர்தமான்ஆகிய மாவட்டங்களில் தலா 9 தொகுதிகளும், தெற்கு தினாஜ்பூர், மால்டா ஆகிய மாவட்டங்களில் தலா 6 தொகுதிகளும், கொல்கத்தாவில் 4 தொகுதிகளும் என மொத்தம் 34 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5.31 மணி வரை 75.06 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.

;