election2021

img

திரிணாமுல்லுக்குப் போடுகிற ஓட்டு பாஜகவுக்குப் போடுவதற்குச் சமம்... சூர்யகாந்த மிஸ்ரா பேச்சு...

கொல்கத்தா:
திரிணாமுல்லுக்கு வாக்களிப்பது பாஜக-வுக்கு வாக்களிப்பதற்குச் சமம் என்றும், பாஜக-வுக்கு வாக்களிப்பது திரிணாமுல்லுக்கு வாக்களிப்பதற்குச் சமம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மேற்கு வங்க மாநிலச் செயலாளர் டாக்டர்சூர்யகாந்த மிஸ்ரா கூறினார். தேர்தலுக்குப் பிறகு இவர்களில் யாரெல்லாம் எந்தப் பக்கம் இருப்பார்கள் என்பதை இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது என்றார். 

பாஜக வேட்பாளர்களில் பலரும் அண்மைக் காலம்வரை திரிணாமுல் கட்சியில் இருந்தவர்கள். பாஜக-விலிருந்து திரிணாமுல்லுக்குக் கட்சி மாறியவர்களும் தற்போது வேட்பாளர்களாகி உள்ளனர். இடது முன்னணியையும் மார்க்சிஸ்ட் கட்சியையும் எதிர்ப்பதற்கு இந்த இரண்டு கட்சியினரும் ஒன்று சேருவார்கள் என்றும் அவர் கூறினார். மார்ச் 27 சனிக்கிழமை முதல்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள பங்குராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சூர்யகாந்த மிஸ்ரா பேசினார்.இடது முன்னணியின் கூட்டு இயக்கத்தினால் மட்டுமே மேற்கு வங்கப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியும். தேர்தலில் மக்களின் பிரச்சனைகளைப் பேசுவது இந்த அணி மட்டுமே என்று பேசிய சூர்யகாந்த மிஸ்ரா, திரிணாமுல்லையும் பாஜக-வையும் தனிமைப்படுத்தி, வங்கத்தின் முழுமையான வளர்ச்சிக்காக இடது முன்னணியின் கூட்டு இயக்க வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். 

கொல்கத்தா செய்தியாளர் கோபி... 

;