election2021

img

ராமர் கோயிலுக்கு இலவசமாக பயணம்... பாஜக வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி....

கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் பந்தபேஸ்வர் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக சார் பில் போட்டியிடுபவர் ஜிதேந்திர திவாரி. இவர் தனது தொகுதி வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்தபோது, தான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் தொகுதி மக்களைஇலவசமாக அயோத்தி ராமர் கோயிலுக்குஅழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். இரண்டுமுறை இதேபோல தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, மார்ச் 22 அன்று அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஜிதேந்திர திவாரியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது.ஆனால், இதுபோன்று வாக்குறுதிகள் அளிப்பது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியவை என எனக்குத் தெரியாது என, அப்பாவி போல ஜிதேந்திர திவாரி பதில் அளித்துள்ளார். தமது அறியாமைக்காக மன்னிப்பு கோருவதாகவும் நாடகம் போட்டுள்ளார்

;