election2021

img

டோலிகஞ்ச் பேரணியில் 500 பேர்கூட இல்லை... மக்கள் கூட்டம் வராததால் பிரச்சாரத்தை ரத்துசெய்த நட்டா....

கொல்கத்தா:
பாஜக வேட்பாளர்கள் பாபுலால்சுப்ரியோ, நடிகை பாயல் சர்கார்ஆகியோருக்கு வாக்கு சேகரிப்பதற் காக, அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மேற்கு வங்கத்திற்குவந்திருந்தார். ஆனால், இங்கு அவர் பங்கேற்றபிரச்சார நிகழ்ச்சிக்கு 500 பேர் கூடவராமல், சேர்கள் அனைத்தும் காலியாக கிடந்ததால், அதிர்ச்சியடைந்த நட்டா, தான் பங்கேற்பதாக இருந்த அனைத்துக் கூட்டங்களையும் ரத்துசெய்துவிட்டு, கோபத்தில் தில்லிக்கேகிளம்பிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு வங்கச் சட்டப்பேரவைக் கான, நான்காம் கட்டத் தேர்தல் ஏப்ரல்10 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, ஹூக்ளி மாவட்டத்தில் மூன்று பிரச்சாரக் கூட்டங்களில் பேசுவதற்காக, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, கொல்கத்தாவுக்கு வந்திருந்தார்.தனது முதல் கூட்டத்தை அவர்டோலிகஞ்ச்சில் நடத்தினார். இதையடுத்து ஸ்ரீராம்பூர் மற்றும் சுன்ஞ்சுராஆகிய இடங்களுக்கு பிரச்சாரத் திற்கு செல்வதாக இருந்தார். ஆனால்,டோலிகஞ்ச் பிரச்சாரத்திற்கே எதிர் பார்த்த கூட்டம் வரவில்லை. சுமார் 7 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 500 பேர்கூட வரவில்லை. சேர்கள் அனைத் தும் காலியாகவே கிடந்துள்ளன.

இதனைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த நட்டா, அங்கு நேரில் சென்று பிரச்சாரம் செய்ய மறுத்துள்ளார். தனதுசெல்போன் மூலமாகவே அங்கிருந்தகூட்டத்தினர் இடையே பேசிய அவர்,ஸ்ரீராம்பூர் மற்றும் சுன்ஞ்சுரா கூட்டங் களையும் ரத்து செய்துவிட்டு, தில் லிக்கே திரும்பிச் சென்றுள்ளார்.ஆனால், “நட்டா பயணித்த ஹெலிகாப்டரில் சிறு பிரச்சனை ஏற்பட்டு விட்டது. அதனால்தான் அவர் கூட் டத்தை ரத்து செய்தார்” என்றும், “தில்லியில் நடைபெறும் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே அவர் கிளம்பிச் சென்றார்” என்றும் பாஜக-வினர் என்னென்னவோ காரணங்களைக் கூறி சமாளித்து வருகின்றனர்.

;