election2021

img

திரிணாமுல், பாஜக இரண்டையுமே வங்க மக்கள் தோற்கடிக்க வேண்டும்.... புத்ததேவ் பட்டாச்சார்யா வேண்டுகோள்...

கொல்கத்தா:
மேற்கு வங்கத் தேர்தலில், ‘ஜனநாயக விரோத’ திரிணாமுல், ‘வகுப்புவாத’ பாஜக ஆகிய இரண்டு கட்சிகளையுமே மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேற்கு வங்கத்தின் பெருமையாக இருந்த மத நல்லிணக் கத்தை ஆளும் திரிணாமுல் கட்சியும், பாஜகவும் குழிதோண்டி புதைத்து விட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

சுவாசக் கோளாறால் உடல்நலம் பாதிக்கப்பட்ட புத்ததேவ்பட்டாச்சார்யா தற்போது மருத்துவர்களின் ஆலோசனை பேரில் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப் பதிவையொட்டி, தனது பேச்சு அடங்கிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:2011 முதல் கடந்த 10 ஆண்டுதிரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில், வங்கத்தில் ஒரு தொழிற்சாலைகூட தொடங்கப்படவில்லை. இளைஞர்களின் கனவுகள் சிதைந்து விட்டன. அவர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்லும் அவல நிலைஉள்ளது. கல்வித்துறை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு எட்டாத ஒன்றாக சுகாதாரப் பாதுகாப்பு மாறிவிட்டது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு, சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது.

வங்கத்தின் பெருமையாக இருந்த மத நல்லிணக்கம் இன்றுவிஷமாக்கப்பட்டு உள்ளது. ஒருபுறம், சர்வாதிகார திரிணாமுலையும் மறுபுறம் பாஜக-வின் அழிவுகரமான மற்றும் முதலாளித் துவ பொருளாதாரக் கொள்கையையும், அதன் பிளவுபடுத்தும் அரசியலையும், ஆர்எஸ்எஸ்-ஸின் ஆபத்தான வகுப்புவாத சித்தாந்தத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் வங்கம் உள்ளது.

தற்போது தேர்தல் நடைபெறும் நந்திகிராம், சிங்கூர்பகுதியை எடுத்துக் கொண்டால்,இந்தப் பகுதியில் தற்போது ஒரு மயான அமைதி நிலவுகிறது.இதற்கு திரிணாமுல் கட்சியும், பாஜகவும்தான் காரணம். நந்திகிராம், சிங்கூரில் இருவரும் கூட்டாக சேர்ந்துதான் தந்திரமாக சதியில் ஈடுபட்டனர். இப் போது அந்த சதிகாரர்கள் இரு அணியாக பிரிந்து ஒருவர் மீதுஒருவர் சேற்றை வாரி இறைக் கின்றனர். உண்மையில் திரிணாமுல், பாஜக - இந்த இரு கட்சியினருமே சதிகாரர்கள். அவர் களை மக்கள் தோற்கடிக்க வேண்டும். ஜனநாயகம், சமூக ஒற்றுமையை நிலைநாட்ட மதச்சார்பற்ற இடதுசாரி கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு புத்ததேவ் பட் டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

;