election2021

img

மோடிக்கு இல்லாதது யாருக்கும் இல்லை... ஒட்டுமொத்த பிரச்சாரத்திற்கும் தடை விதித்தது, தேர்தல் ஆணையம்...

கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல்முடிந்துள்ளன. இன்னும் 2 கட்டங்கள் பாக்கி இருக்கின்றன.

கொரோனா தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு, இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரசும் கடந்த வாரமே தங்களின் பிரச்சாரத்தை நிறுத்தி விட்டன. ஆன்லைன் மூலம் மட்டுமே பிரச்சாரம் செய்யப் போவதாக கூறிவிட்டன. ஆனால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக-வினர், திரிணாமுல் தலைவரும் மேற்கு வங்கமுதல்வருமான மம்தா பானர்ஜிஆகியோர் மட்டுமே ஆயிரக்கணக்கானவர்களைக் கூட்டி தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு மம்தாவும் தனது பிரச்சாரத்தை கைவிடுவதாக அறிவித்தார். இறுதியில் மோடி, அமித்ஷா மட்டுமே பிரச்சாரம் செய்து வந்தனர். 

இதனிடையே, கொரோனா விவகாரத்தில் உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் கண்டனத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டதால், பிரதமர் மோடியும் வியாழனன்று தனது மேற்கு வங்க தேர்தல் பயணத்தை கைவிடுவதாக அறிவித்தார். மாநில முதல்வர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டியுள்ள தாக அவர் கூறினார். இந்நிலையில், மோடியின் அறிவிப்பையொட்டியே தேர்தல்ஆணையமும் மக்கள் மீதுதிடீரென அக்கறை வந்து, மேற்குவங்கத்தில் யாருமே தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது. மோடி பிரச்சாரம் செய்யும் வரை பொறுமையாக காத்திருந்த தேர்தல் ஆணையம், தற்போது மோடி இடத்தைக் காலி செய்தவுடன், எந்தவொரு கட்சியுமே கொரோனா தடுப்பு விதிமுறை களை பின்பற்றாததால்- நாங்கள் அனைவருக்குமே தடை விதிக்கிறோம் என்று தனது ‘நடுநிலையை’ காட்டிக்கொண்டுள்ளது.

;