election2021

img

காரின் கதவு மோதியதில்தான் மம்தா காலில் எலும்பு முறிவு..... மேற்குவங்க தலைமைச் செயலாளர் அறிக்கை....

கொல்கத்தா
நந்திகிராமில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு, திரும்பும்போது சிலர் தன்னைக் கீழே தள்ளிவிட்டதாகவும், இதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். 

அங்கு மூன்று நாள் சிகிச்சைக்குப்பின் தற்போது அவர் வீடு திரும்பியுள்ளார். முன்னதாக, நந்திகிராமில் நிகழ்ந்தது திட்டமிட்ட தாக்குதல் என்றும், மேற்குவங்க டிஜிபி-யை இடமாற்றம் செய்ததன் பின்னணியில் இந்த பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டுள்ளதால், இதற்கு தேர்தல் ஆணையமும் முக்கியக் காரணம் என்று  திரிணாமுல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். 

இதனை உடனடியாக மறுத்த தேர்தல் ஆணையம், நந்திகிராம் சம்பவம் தொடர்பாக மேற்குவங்கத் தலைமைச் செயலாளரிடம் அறிக்கை கேட்டிருந்தது.அதன்படி தலைமைச் செயலாளர் அலப்பன் பாந்தோபத்யாயா தற்போது அறிக்கை அளித்துள்ளார். 
அதில், மார்ச் 10 அன்று சம்பவம் நடந்தபோது நந்திகிராம் சாலையில் ஏராளமான மக்கள் திரண்டிருந்ததாகவும், அப்போது காரின் கதவு மோதியே மம்தாவின் காலில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

;