election2021

img

சுவேந்து அதிகாரி சொன்னால் நானும் பாஜகவில் இணைவேன்.... திரிணாமுல் எம்.பி பேச்சால் மம்தா அதிர்ச்சி...

கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சியின் முன்னணி தலைவராக இருந்தவர் சுவேந்து அதிகாரி. அம் மாநில அமைச்சராகவும் இருந்தார். 

இவர், கடந்த 2020 நவம்பரில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுக்குத் தாவினார். அப்போது முதலே மம்தாவுடன் அவர் கடுமையாக மோதி வருகிறார். தனது சொந்தத் தொகுதியான நந்திகிராமில் போட்டியிட்டு மம்தா வெல்லமுடியுமா? என்று சவால் விட்ட அவர்,மம்தாவை நான் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்என்றும் கூறினார். மம்தாவும் அவரதுசவாலை ஏற்று, நந்திகிராம் தொகுதியில் தற்போது போட்டியிடுகிறார்.சுவேந்து அதிகாரி பாஜகவுக்கு சென்றாலும், அவரது தந்தை சிசிர்அதிகாரி மற்றும் சகோதரர் திபேந்து அதிகாரி ஆகிய இருவரும் திரிணாமுல் கட்சியிலேயே தொடர்கின்றனர். இவர்கள் இரண்டு பேருமே திரிணாமுல் கட்சி எம்.பி.க்கள் ஆவார்கள். இது மம்தாவுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

ஆனால், சுவேந்து அதிகாரி தற்போது இதற்குள்ளும் புகுந்து ஆட்டையைக் கலைத்துள்ளார். தனது தந்தை தனக்கு ஆதரவாக பாஜகவில் இணைவார் என்று அண்மையில் கொளுத்திப் போட, பதிலுக்கு சிசிர்அதிகாரியும் “சுவேந்து அதிகாரி கூறினால் பாஜகவில் இணைவேன்” என்றுமம்தாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். அத்துடன் பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜியையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார். இதையடுத்து, சனிக்கிழமையன்று மேற்கு வங்கத்தின் கந்தி பகுதியில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் சிசிர் அதிகாரியும் பாஜகவில் இணைவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

;