election2021

img

தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பணம், நகை பறிமுதல்.... தேர்தல் ஆணையம்...

புதுதில்லி:
தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் இதுவரைரூ. 331 கோடி பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த பிப்.26 அன்று அறிவித்தது. புதுச்சேரி, கேரள மாநிலங்களை போல், தமிழகத்திலும் ஏப்ரல்6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. இவற்றில் பதிவாகும் வாக்குகள், மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளது என அறிவித்தது.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் கடந்த பிப்ரவரி 26 மாலை முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிரசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 பறக்கும் படை, கண்காணிப்புக்குழுக்கள் உள்ளிட்டபல்வேறு குழுக்களை தேர்தல்ஆணையம் அமைத்தது. இதுதவிர ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட தேர்தல் பார்
வையாளர்கள், செலவின பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் இதுவரைரூ. 331 கோடி பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம்தகவல் தெரிவித்துள்ளது.இதுவரை நடந்த சோதனையில் ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி மற்றும் இதர உலோக பொருட்கள், சேலைகள், துணிமணிகள், மடிக்கணினி, குக்கர், மதுபாட்டில்கள், புகையிலை, கஞ்சா போன்ற பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்குவங்க மாநிலத்தில் 19.11 கோடி ரொக்கம் உட்பட ரூ.112.59 மதிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திங்கள் வரை ரூ.133 கோடி மதிப்பிலான பணம், நகை, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

;