election2021

img

பிரதமர் வீட்டுவசதித் திட்ட விளம்பரத்திலும் பாஜக மோசடி.... சொந்த வீடு பெற்றதாக கூறியவர் இப்போதுவரை வாடகை வீட்டில் வசிக்கிறார்...

கொல்கத்தா:
பாஜக என்றாலே மோசடி, தில்லுமுல்லு, பித்தலாட்டம் என்றாகிவிட் டது. சமீபத்தில், பாஜக-வில் இல்லாதவர்களையும், அடுத்த கட்சிக்காரர் களையும் வேட்பாளர்களாக அந்தக் கட்சி தேர்தலில் அறிவித்தது. இவ்வாறு வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டது, சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாது என்ற நிலையில், அவர்கள்அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் எங்களைக் கேட்காமலேயே எப்படி வேட்பாளராக அறிவிக்கலாம்? என்று கொந்தளித்து விட்டனர். தாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்றும் கூறிவிட்டனர்.இந்த மோசடிகள் ஒருபுறமிருக்க, ஏழைகளுக்கு வீடு வழங்கும்,‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தில், ஒருவருக்கு வீடு வழங்காமலேயே, வீடு வழங்கி விட்டதாகவும், இதற்காக அந்த பயனாளி பிரதமர் மோடியை பாராட்டினார் என்றும்விளம்பரம் வெளியிட்டு, பாஜக கையும் களவுமாக சிக்கியுள்ளது.மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ‘ஆத்ம நிர்பர் பாரத், ஆத்ம நிர்பர் வங்கம்’ என்றதலைப்பில் ‘பாஜக செய்துள்ள சாதனைகளைப் பாரீர்’ என்று முழுப்பக்க வண்ண விளம்பரங்களை செய்தித்தாள்களில் பாஜக வெளியிட்டுள்ளது. 

இதில், ‘பிரதம மந்திரி ஆவாஸ்யோஜனா’ (Pradhan Mantri AwasYojana) திட்டத்தில் மேற்கு வங்கத்தில் 24 லட்சம் பேருக்கு வீடு வழங்கப்பட்டு அவர்கள் பயனடைந்ததாக கூறும் விளம்பரமும் ஒன்றாகும். பிப்ரவரி 25 அன்று வெளியான இந்தவிளம்பரத்தில் வரும் ஒரு பெண் மணி, ‘பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா’ மூலம்தான் எனக்கு வசிப்பதற்கு ஒரு வீடும், தலைக்கு மேல் கூரையும் இருக்கிறது...” என்றுகூறுவது போல வாசகம் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில், விளம்பரத்தில் இடம்பெற்ற பெண்ணை ‘இந்தியாடுடே’ நாளிதழ் தேடிக் கண்டுபிடித் தது. அவர் கொல்கத்தா-வின் பௌபஜார் பகுதியில் உள்ள மலங்கா சந்தில் வசித்து வரும் லட்சுமி தேவி என்பதையும் உறுதிப்படுத்தியது.செய்தித்தாளில் வந்த விளம்பரம் குறித்து அவரிடம் கேட்டபோது, இந்த விளம்பரத்தில் இருப்பது தன்புகைப்படம்தான் என்றும், ஆனால்தன் புகைப்படம் இந்த விளம்பரத் தில் எப்படி வந்தது? என்று எதிர்க் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றும்கூறியுள்ளார்.

மேலும், ‘பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா’ மூலம்தான் எனக்கு வசிப்பதற்கு ஒரு இடம் இருக்கிறது...” என்று கூறியதாக விளம்பரத்தில் காட்டப்பட்ட லட்சுமிதேவி, ஒற்றை அறையில் வாடகைக்கு ஒண்டு குடித்தனம் செய்துவருவதாகவும், 6 பேர் கொண்ட தனதுகுடும்பத்தில், குழந்தைகள் அறையினுள் படுத்துக்கொள்ள, பெரியவர்கள் இப்போதும் வெளியில் உள்ளநடைபாதையில்தான் படுத்துக் கொள்கிறோம்; இந்த இடத்திற்கு மாதம் 500 ரூபாய் வாடகை கொடுக்கிறோம் என்றும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளார்.எழுதப்படிக்க தெரியாத தனக்கு,இந்த விளம்பரம் குறித்து அக்கம் பக்கத்தினர் சொல்லித்தான் தெரியும் என்றும் இவர், இந்த புகைப்படம் எங்கு? எப்போது? யார் எடுத்தது? என்பது தெரியவில்லை என்றும் அப்பாவியாக கூறியுள்ளார்.ஒருமுறை, பாபுகாட் பகுதியில்நடந்த ஒரு முகாமில், கழிப்பறையைச் சுத்தம் செய்தபோது எடுத்தபுகைப்படம் போல் உள்ளதாக ஊகம்தெரிவித்த அவர், தான் வசிக்கும் வீட்டில் கழிப்பறை வசதி கூட இல்லைஎன்பதையும் ‘இந்தியா டுடே’-விடம்தெரிவித்துள்ளார்.

விளம்பரம் பற்றி பாஜகவை சேர்ந்த யாரிடமும், தான் கேட்கவில்லை என்று கூறும் அவர் இந்தபுகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள தன்னிடம் யாரும் சம்மதம்கேட்கவில்லை என்பதை மட்டும் அழுத்தம் திருத்தமாக உறுதி செய் துள்ளார்.இந்நிலையில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயனடையாத, இப்போதுவரை வாடகை வீட்டில் வசிக்கும் ஒருவரை, பயனாளி என்று காட்டிமோசடி செய்தது பற்றி விசாரித்தறிய, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன் சிங்-கை ‘இந்தியா டுடே’ தொடர்பு கொண்டுள் ளது. ஆனால், அர்ஜூன் சிங் அதற்குபதில் கூறுவதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் ‘இந்தியா டுடே’தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

;