election2021

img

தேர்தல் முடிவதற்கு முன்பே முதல்வர் பதவிக்கு அடிபிடி.... மேற்குவங்க பாஜகவுக்குள் மோதல்...

கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று அனைத்து வகையிலும் பாஜக முயற்சித்து வருகிறது. அக்கட்சியைச் சேர்ந்த பலரும் இப்போதே முதல்வர் பதவிக் கான கனவில் மிதந்து கொண் டிருக்கின்றனர்.

இந்நிலையில், திரிணாமுல் கட்சியிலிருந்து பாஜகவுக்கு வந்தவரும், தற்போது மம்தாவை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுபவருமான சுவேந்து அதிகாரி, மறைமுகமாக முதல்வர் பதவியை நோக்கி காய் நகர்த்தி வருகிறார். மறுபுறத்தில் மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலீப்கோஷ் ஆரம்பம் முதலேகோதாவில் இருக்கிறார். இதில் இவர்கள் இருவருக் குமே தற்போது முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது.

மம்தாவை மட்டும் தோற்கடித்து விட்டால், தான்தான் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் என்பது சுவேந்து அதிகாரியின் கணக்கு. திலீப் கோஷ் தேர்தலிலேயே போட்டியிடவில்லை என்பதால், அவர் தனக்கு போட்டிக்கு வர முடியாது என்பதும் இந்த கணக்கிற்கு பின்னுள்ள காரணம்.ஆனால், சுவேந்து அதிகாரியின் திட்டத்தை கண்டுபிடித்துவிட்ட திலீப் கோஷ்,அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். “மேற்கு வங்காளத்தில் பாஜக வெற்றிபெறும் போது எம்எல்ஏ-வாக இருக்கும் நபர்தான் முதலமைச்சராக வேண்டிய அவசியமில்லை’’ என்று சுவேந்துக்கு ‘செக்’ வைத்துள்ளார்.மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றிபெறப் போவதில்லை என்றாலும், முதல் வர் பதவிக்கு நடக்கும் அடிபிடி, தேர்தல் களத்தை சுவாரஸ்யமாக்கியுள்ளது.

;