election2021

img

அசாம், மேற்குவங்கத்தில் இன்று முதற்கட்டத் தேர்தல்... 77 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப் பதிவு...

புதுதில்லி:
ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான முதற்கட்டத் தேர்தல்சனிக்கிழமையன்று துவங்குகிறது. 

இதில், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள், அசாமில் 47 தொகுதிகள் என மொத்தம் 77 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக் கான வாக்குப் பதிவு மார்ச் 27-இல்துவங்கி ஏப்ரல் 29 வரை மொத்தம்8 கட்டங்களாக நடைபெறும் என்றுதேர்தல் ஆணையம் பிப்ரவரி 26-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம்தேதியும், அசாமில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகவும், மேற்குவங்க மாநிலத்தில் 294தொகுதிகளுக்கு 8 கட்டங்களாகவும் வாக்குப் பதிவு நடைபெறும் என்று ஆணையம் கூறியிருந்தது.அதன்படி அசாம் மாநிலத்தில்முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் முதற் கட்டமாக 30 தொகுதிகளுக்கும் மார்ச் 27 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில காவல் துறையினர், துணைராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

;