election2021

img

சுவேந்து அதிகாரியின் தந்தையும் பாஜகவுக்குத் தாவினார்....

கொல்கத்தா:
திரிணாமுல் காங்கிரஸின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த அரசியல் குடும்பத் தின் மையப் புள்ளியாக இருந்தவர் சிசிர் அதிகாரி ஆவார். ஒரே வீட்டில் தந்தை(சிசிர் அதிகாரி)நாடாளுமன்ற உறுப்பினர், மகன் (திபேந்து அதிகாரி) நாடாளுமன்ற உறுப்பினர். மற்றொருமகன் (சுவேந்து அதிகாரி) மாநில அமைச்சர்.

சுவேந்து அதிகாரி பாஜகவுக்கு சென்றாலும், அவரது தந்தை சிசிர் அதிகாரி மற் றும் சகோதரர் திபேந்து அதிகாரி ஆகிய இருவரும் திரிணாமுல் கட்சியிலேயே தொடர்ந்து வந்தனர்.அந்த தைரியத்திலேயே மம்தா பானர்ஜியும், நந்திகிராமில் சுவேந்து அதிகாரியை எதிர்த்துப் போட்டியிடுவதாக அறிவித்து வேட்புமனுத் தாக்கல் செய்தார். சிசிர் அதிகாரி குடுமபத்திற்குமேதினிபூர், பங்குரா மற் றும் புருலியா என 3 மாவட்டங்களில் உள்ள 30 சட்டமன்றதொகுதிகளில் செல்வாக்குஇருப்பதே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.ஆனால், எதிர்பாராத விதமாக, ‘எனது மகன் சுபேந்து அதிகாரி அழைத்தால், பாஜகவில் சேருவேன்’ என்று கூறி சிசிர் அதிகாரி மம்தாவுக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்படியே சனிக்கிழமையன்று அமித்ஷா முன்னிலையில் அவர் பாஜக-வுக்குதாவியுள்ளார்.

மேலும் கூட்டத்தில் பேசிய சிசிர் அதிகாரி, “மம்தா கட்சியின் வன்முறை வெறியாட்டத்தில் இருந்து மேற்கு வங்கத்தை காப்பாற்ற வேண்டும். மாநிலத் தில் மிக மோசமான சூழல்உள்ளது. சட்டம் - ஒழுங்குசீர்குலைந்து விட்டது. மம்தாபானர்ஜி ஆட்சி செய்யும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்” என்று விமர்சித் துள்ளார்.மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில், மத்திய ஊரகமேம்பாட்டுத்துறை இணையமைச்சராகவும் சிசிர் அதிகாரி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;