election2021

img

நடிகர் - நடிகைகளைத் தேடிக் கொண்டிருக்கும் பாஜக..... கேரளா, மேற்குவங்கத்தில் பொதுமக்கள் யாரும் வரத் தயாரில்லை...

கொல்கத்தா:
தனிப்பெரும் தலைவர்களாக மோடி, அமித் ஷா தங்களிடம் இருக்கின்றனர் என்றுகூறிக்கொண்டாலும், நடிகர் - நடிகையர், கிரிக்கெட் வீரர்களை தேடிப்பிடிக்கும் கட்சியாகவே பாஜக இருக்கிறது. 

குறிப்பாக, தங்களுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் நடிகர் - நடிகையரை வைத்து பிரபலம் அடைய முயன்று வருகிறது. தமிழகத்தில் கூட ரஜினி மேல் சவாரி செய்யப் பார்த்தது. அது நடக்கவில்லை. எனினும், சினிமாக்காரர்களான கங்கை அமரன், ராதாரவி, விஜயகுமார், பொன்னம்பலம், எஸ்.வி. சேகர், காயத்ரி ரகுராம், குட்டிபத்மினி, நமீதா, கவுதமி, ஆர்.கே. சுரேஷ்துவங்கி கடைசியாக நடிகை குஷ்பு, சிவாஜிகணேசனின் மூத்தமகன் ராம்குமார், நடிகர்அர்ஜூன், நடிகர் செந்தில் வரை பலரையும் பாஜக வளைத்துப் போட்டுள்ளது.

தற்போது கேரளா, மேற்குவங்க மாநிலங்களிலும் நடிகர்- நடிகையரை தேடிப்பிடித்து வருகிறது. கேரளத்தில் கடந்த தேர்தலின்போதே சுரேஷ் கோபி உள்ளிட்ட நடிகர்களை வளைத்த பாஜக, 2021 தேர்தலுக்கு ரஜினியின் ‘பாட்ஷா’ படத்தில் நக்மாவுக்கு வளர்ப்புத் தந்தை வேடத்தில் நடித்த நடிகர் தேவன் மற்றும் நடிகை ராதா ஆகியோரைத் தேடிப் பிடித்துள்ளது. ஏற்கெனவேமெட்ரோமேன் ஸ்ரீதரனை பிடித்துப் போட்டுவிட்டது.மேற்குவங்கத்தில், ஏற்கெனவே அஞ்சுகோஷ், ரிஷி கவுசிக், காஞ்சனா மொய்த்ரா,ருபஞ்சனா மித்ரா, பிஸ்வஜித் கங்குலி, யாஷ்தாஸ்குப்தா, பாயல் சர்க்கார் என 12-க்கும்மேற்பட்ட நடிகர் - நடிகையரை கட்சிக்குள்இழுத்துப் போட்ட பாஜக, ஞாயிறன்று பழம்பெரும் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியை பாஜக-வில் சேர்த்துள்ளது.

இவர்களில் மிதுன் சக்கரவர்த்தி பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ஆவார். மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் எம்.பி.யாக இருந்தபோது, சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் சிக்கினார். அமலாக்கத்துறை விசாரணையையும் எதிர்கொண்டார். ரூ. 1 கோடியே 20 லட்சம் வரைபணத்தைத் திருப்பி அளித்தார். இவரைகடந்த பிப்ரவரி மாதம், அவரது வீட்டிற்கேசென்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்தித்தார். அப்போதே மிதுன் பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மிதுனோ உடனடியாக அதை மறுத்தார். ஆனால், தற்போது மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தோன்றி, திடீரென பாஜக-வில்இணைந்துள்ளார்.அத்துடன், ‘நான் உன்னை இங்க அடிச்சேன்னா உன் உடம்ப சுடுகாட்டுலதான் கண்டுபிடிக்கணும்...’ “விஷமில்லாத பாம்பு என என்னை நினைத்து விடாதீர்கள், நான் நாகப்பாம்பு ஒரே கடியில் நீங்கள்காலியாகி விடுவீர்கள்..” என்று தான் நடித்தபடங்களிலிருந்து 2 வசனங்களை பேசியும் ரசிகர்களை அவர் உற்சாகப்படுத்தினார். மேற்குவங்கத்தில் இத்துடன் முடிந்துவிடவில்லை. தொடர்ந்து நடிகர் - நடிகை தேடுதல் வேட்டையை பாஜக நடத்திக் கொண்டிருக்கிறது.

கங்கனாவைத் தொடர்ந்து மிதுனுக்கும் ‘ஒய் பிளஸ்’
பாஜக ஆதரவு பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத்திற்கு, மத்திய பாஜக அரசு ‘ஒய் பிளஸ்’ கமாண்டோ பாதுகாப்பு வழங்கியது. இந்நிலையில், கடந்த வாரம் பாஜகவில் இணைந்த பாலிவுட் முன்னாள் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மிதுன் சக்கரவர்த்திக்கும் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியுள்ளது. மேற்குவங்கத்தில் சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மிதுன் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

;