election2021

img

மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளராக அறிவித்த 2 பேர் போட்டியிட மறுப்பு..... எங்களுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவிப்பு....

கொல்கத்தா:
கேரள மாநிலம் வயநாடு சட்டமன்றத் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மணிக்குட்டன், ‘ஆட்டைக்கே வரவில்லை... ஆளைவிடுங்கள்...’ என்று இரண்டு நாட்களுக்கு முன்பு ஓட்டம் பிடித்தார்.

தன்னைக் கேட்காமலேயே, தனது பெயரைவேட்பாளராக அறிவித்து விட்டார்கள் என்றும் மணிக்குட்டன் குற்றம் சாட்டினார். இது பாஜகவினர் மத்தியில் மட்டுமன்றி, ஒட்டுமொத்த கேரளமக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், மேற்குவங்கத்திலும் 2 வேட் பாளர்கள், தங்களின் சம்மதம் இல்லாமலேயே, பாஜக தங்களை வேட்பாளர்களாக அறிவித்து விட்டதாகவும், தாங்கள் போட்டியிட மாட்டோம் என்றும் அறிவித்திருப்பது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.காசிப்பூர்-பெல்கச்சியா தொகுதி பாஜகவேட்பாளராக தருண் சகா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், “பாஜக கட்சியிலேயே இல்லாதஎன்னை எப்படி வேட்பாளராக அறிவித்தார்கள்..?”என அவர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். 

“வேட்பாளர் நியமனம் தொடர்பாக பாஜகதலைவர்கள் ஒருவர் கூட என்னிடம் பேசவில்லை;மாறாக, அந்தக் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டதனியார் சர்வே கம்பெனியிலிருந்துதான் பேசினார்கள். அவர்களிடமும் பாஜக-வில் சேர எனக்குநேரம் இல்லையென சொல்லிவிட்டேன்... அப்படியிருந்தும் வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் வந்துள்ளது... என்று சகா பொங்கியுள்ளார்.தருண் சகாவின் மனைவி மாலா சகாதான், காசிப்பூர்-பெல்கச்சியா தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ஆவார். திரிணாமுல் கட்சியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காத நிலையில்தான், மாலா சகாவின் கணவர் தருண் சகாவுக்கு பாஜக வலை விரித்துள்ளது. எனினும்தருண் சகா, அந்த சதிவலையில் விழாமல் தப்பித்ததுடன், பாஜகவின் தில்லாலங்கடி வேலைகளை துணிந்து அம்பலப்படுத்தியுள்ளார்.சௌரிங்கீ தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஷிகா மித்ரா கவுத்ரியின் கதையும் இதுவாகவே உள்ளது. இவ்வளவுக்கும் ஷிகா மித்ரா,மறைந்த காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ராவின்மனைவி ஆவார். 

இவரை பாஜக தனது வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில், “என்னுடைய பெயர் எனதுஒப்புதல் இல்லாமலேயே சேர்க்கப்பட்டுள்ளது. நான் பாஜகவில் இல்லை. அந்தக் கட்சியில் சேரப்போவதும் இல்லை” என்றும் மித்ரா அதிரடியாக அறிவித்துள்ளார்.“காங்கிரஸ் கலாச்சார பாரம்பரியம் உள்ளகுடும்பத்தைச் சேர்ந்தவள், நான். அப்படியிருக்கபாஜக வேட்பாளராக நான் ஏன் போட்டியிட வேண்டும்? என்றும் கேட்டுள்ளார். மேலும், தான் பாஜகசார்பில் போட்டியிடப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், இவை எதற்கும் பாஜக தலைமைபதிலளிப்பதாக இல்லை. “என்ன நடந்தது? எப்படிநடந்தது? என்பதைப் பற்றி கட்சி தீவிரமாக விசாரணை நடத்தும்” என பொத்தாம் பொதுவாக பேசிசமாளித்துள்ளார், பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவர் ராகுல் சின்ஹா.எனினும், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்பட்டியல் வெளியான போதே, இதுபோன்ற சர்ச்சைகள் துவங்கி விட்டன என்பதுதான் உண்மை.

தெற்கு ஹவுரா சட்டமன்ற தொகுதி பாஜகவேட்பாளராக ரண்டிதேவ் சென்குப்தா என்பவர் அறிவிக்கப்பட்ட நிலையில், “நான் எப்போதுபாஜகவில் சீட் கேட்டேன்?” என்று அப்போதே அவர்பாஜகவினரின் மூக்கை உடைத்தார். “எனக்குசீட் தாருங்கள் என நான் கட்சியில் கேட்கவில்லை. அவர்களும் எனக்கு சீட் தருவதாக தகவல் தெரிவிக்கவில்லை. பின்னர் எப்படி வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் வந்தது?” என்றுகேள்வி எழுப்பியது முகத்தில் அறைந்தாற்போல்அமைந்தது. இது பாஜக-விற்குள் சலசலப்பையும்ஏற்படுத்தியது.தற்போது மேலும் 2 வேட்பாளர்கள் போட்டியிட மறுத்தது, மத்திய ஆளும்கட்சியான பாஜகவுக்கு பெருத்த அவமானமாகி உள்ளது.இதனைக் குறிப்பிட்டுள்ள திரிணாமுல் கட்சித் தலைவர் டெரிக் ஓ பிரையன், “ஒவ்வொருமுறை பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போதும் நீங்கள் ஆம்லெட் செய்யலாம். அவர்கள்முகத்தில் அவ்வளவு முட்டை வழிகிறது” என்று கிண்டலடித்துள்ளார்.

;