election2021

img

மாப்ள இவரு தான்... ஆனா ...

புதுச்சேரியில் தனது ‘சித்து’ விளையாட்டுகளை (மாப்ள இவரு தான்... ஆனால்... )தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது பாஜக. காங்கிரஸ் கட்சியை பிளவுபடுத்தி தங்கள் கட்சிக்குள் சிலரை இழுத்துக்கொண்ட அதே நிலை, என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்டது. அக்கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும், பாஜக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று கூறுவதா என்று கொதித்து எழுந்தனர். பாஜகவுடன் ஒட்டும் வேண்டாம், உறவும் தேவையில்லை என்று பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவிக்க, அவசர அவசரமாக கூட்டத்தை நடத்தினார் ரங்கசாமி. ஆனாலும் கூட்டணி குறித்த முடிவு அவர் கையில் விடப்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பிறகு பாஜகவோடு தொகுதி உடன்பாடு செய்து கொண்டதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ரங்கசாமி.
இந்த நிகழ்வின் போது கூட்டணிக்கு தலைமை யார்? முதலமைச்சர் வேட்பாளர் யார்? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாஜக தலைவர்கள், “கூட்டணிக்கு தலைவரு ரங்கசாமி தான், ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் இல்ல”என்றனர். இதனால் மீண்டும் கொதித்தெழுந்தனர் என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள்.

இதனிடையே, புதுவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகளை விட்டுக்கொடுத்து, 14 தொகுதிகளை  எடுத்துக்கொண்ட பாஜக - அதிமுக, தங்களுக்கு ஒரு தொகுதி கூட தராமல் ‘கல்தா’ கொடுக்கக் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது பாமக. மறுபுறம் முதலமைச்சர் கனவோடு பாஜகவில் கரைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட பலரும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

;