election2021

img

ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர முயன்றால் எரிந்து போவீர்கள்... மகாராஷ்டிர விவகாரத்தில் பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை...

மும்பை:
மும்பை காவல்துறை ஆணையராக இருந்த பரம்பீர் சிங், முதல்வர்உத்தவ் தாக்கரேக்கு அண்மையில்கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ‘‘மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்(காங்கிரசை சேர்ந்தவர்), மும்பைநடன விடுதி, மதுபான விடுதிகளில் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலித்து தருமாறு எனக்கு உத்தரவிட்டார். நான் மறுத்து விட்டதால், கீழ்நிலை அதிகாரிகள் மூலம் பணம்வசூலித்தார். தற்போது வெடிகுண்டு கார் பிரச்சனையை பயன் படுத்தி என் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த கடிதம் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பையும், குழப்பத் தையும் ஏற்படுத்தியது. அனில் தேஷ்முக் பதவி விலகுமாறு பாஜகவினர் கூச்சல் போட்டு வருகின்றனர். குடியரசுத் தலைவர் ஆட்சியைஅமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.இந்நிலையில், “அனில் தேஷ் முக் விவகாரத்தை சாக்காக வைத்து, மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர யாரேனும் முயற்சித்தால், அந்தத்தீயில் நீங்களே எரிந்து விடுவீர்கள்”என்று பாஜகவினருக்கு சிவசேனா
மூத்த தலைவரான சஞ்சய் ராவத்எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.“காவல்துறை அதிகாரி பரம்பீர்சிங் எழுதியுள்ள கடிதம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியுள்ளார். என்சிபி தலைவர் சரத் பவாரும் இதனை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசும் விசாரணைக்குத் தயாராகவே உள்ளது. இந்நிலையில், தேஷ்முக் பதவி விலக வேண்டும்என ஏன், தொடர்ச்சியாக பிரச்சனை எழுப்பப்படுகிறது?” என் றும் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

;