election2021

img

500 அறிவிப்புகளுடன் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு....

சென்னை:
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் கொரோனா நிவாரணம் 4 ஆயிரம் ரூபாய்வழங்கப்படும், முதியோர்-விதவைஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தப் படும். சமையல் எரி வாயு உருளையின் விலையை குறைத்திட மானியமாக 100 ரூபாய் அளிக்கப்படும், கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். அரசு ஊழியர், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் உள்ளிட்ட 500 அறிவிப்புகளை தனது தேர்தல் வாக்குறுதியாக மதச்சார்பற்ற கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக அறிவித்திருக்கிறது.

தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி பொதுத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான திமுகஅறிக்கையை (மார்ச் 13) அன்று அண்ணாஅறிவாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கே.என்.நேரு, க.பொன்முடி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.127 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கை பிரதான அறிக்கை, 96 பக்கங்களுடன் மாவட்ட அறிக்கை, முத்தான அறிக்கை என மூன்றாக பிரிக்கப்பட்டிருந்தது. அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “வேட்பாளர் பட்டியல் முதல் கதாநாயகன் என்றால் தேர்தல் அறிக்கை இரண்டாவது கதாநாயகன்” என்றார்.

வரலாறு பேசும் அறிக்கை...
1952 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. இருந்தாலும் அன்றைய தேர்தலுக்கும் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டதையும் அதைத்தொடர்ந்து 1957 ஆம் ஆண்டு முதல் நடந்த சட்டப் பேரவை, நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்களின் விருப்பத்திற்காக திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.டி.ஆர். பாலு தலைமையிலான குழு,மாபெரும் வரலாற்றுக் கடமையை செய்துள்ளது. இது வரலாறு தாண்டி பேசப்படும் என்றும் ஸ்டாலின் குறிப் பிட்டார்.பின்னர் அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் உள்ளன. இதில் சில முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:

ஏழை மாணவர்களின் மருத்துவர் கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வைமுழுமையாக ரத்து செய்ய சட்டம்கொண்டுவரப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின்  பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில், சொத்து வரி அதிகரிக்கப்படாது. கொரோனாகொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். அனைத்துத் தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும். சமையல் எரிவாயுமானியமாக ரூ. 100 வழங்கப்படும். தற்போது இரு மாதத்திற்கு ஒரு முறைஎன்று வசூலிக்கப்படும் மின் கட்டணம் மாதம் ஒருமுறை வசூலிக்கப்படும்.முதியோர் ஓய்வூதியம் 60 வயதுக்குமேற்பட்ட முதியோருக்கு ரூ.1500 உதவித் தொகை கைம்பெண் கள், மணமாகாத பெண்கள், மாற்றுத்திறனாளிகள், இலங்கை அகதிகள் ஓய்வூதியம் 1500 ஆக அதிகரிக்கப்படும். பேறுகால விடுமுறை 12 மாதங்களாக மாற்றப்படும். மகளிருக்கு பேறுகால உதவித் தொகை 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். 

உளுந்தம் பருப்பு...
ஏழை மக்கள் பசி தீர 500 இடங்களில்கலைஞர் உணவகம் அமைக்கப்படும். ரேசன் கடைகளில் ஒரு கிலோ சர்க் கரை கூடுதலாக வழங்கப்படுவதுடன் உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப் படும். தமிழக அரசுப் பள்ளிகளில் 8ஆம்வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக்கப் படும். 100 நாட்கள் வேலைத் திட்டம்,  150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.

சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள்
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணியமர்த்தி கால முறை ஊதியம் வழங்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, பழைய முறையே அமல்படுத்தப்படும்.  பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பத்துக்கு வழங்கப் படும் நிதி,  ரூ.3 லட்சம் என்பது ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்துவதுடன் தனி ஆணையம் உருவாக்கப்படும். 

திருக்குறள் தேசிய நூலாக..
திருக்குறளை தேசிய நூலாக்க மத்தியஅரசை வலியுறுத்துவோம். அதிமுக மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கதனி நீதிமன்றம் முதலமைச்சரின் தலைமையில் தனி நீதிமன்றம் அமைக்கப் பட்டு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரை நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும்.சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். பொங்கல் திருநாள் பண்பாட்டு திருநாளாக கொண்டாடப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சொத்து வரி அதிகரிக்கப்படாது. 

2 லட்சம் வேலை வாய்ப்புகள்
அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டாவுடன் கூடிய கைக்கணினி (டேப்) வழங்கப்படும். அரசு துறையில் 10 ஆண்டுக்கு மேல் அனைத்து பணியாளர்களும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்.முதல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ஆட்டோவுக்கு ரூ.10 ஆயிரம்
சிறு-குறு தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோவாங்க ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். நெல் குவிண்டால் குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2500 ஆக உயர்த்தப்படும். கரும்பு தொகை ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும். ரூ.2500கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்படும். மீனவ சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

கடன் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்தள்ளுபடி செய்யப்படும். 30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு, கட்டணமில்லா பயணச் சீட்டு வழங்கப்படும். ரயில் பாதை இல்லாத16 முக்கிய வழித் தடங்களில் ரயில் பாதை அமைக்க வலியுறுத்துவோம். பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யப் படும் வகையில் சைபர் காவல் நிலையம் வழங்கப்படும்.கனிம வளங்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள் ளன.

மேற்கண்ட செய்தி தொகுப்பு 1-ஆம் பக்கம் மற்றும் 8-ஆம் பக்கம் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் 2 தொகுப்பும் ஒரே தொகுப்பாக உள்ளது. 
 

 

;