election2021

img

பாஜகவுடன் சேர்ந்த போதே அதிமுக தோல்வி உறுதியாகிவிட்டது.... திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேச்சு....

சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போட்டி போடுவது நோட்டாவுடன் தான் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வியாழக்கிழமை முதல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

குடவாசலில் நன்னிலம் தொகுதிதி.மு.க.வேட்பாளர் என்.ஜோதிராமனை ஆதரித்தும், திருவாரூர் தொகுதி தி.மு.க.வேட்பாளர் பூண்டிஎஸ்.கலைவாணனை ஆதரித்து திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்திலும் நீடாமங்கலத்தில் மன்னார்குடி தொகுதி தி.மு.க.வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜாவை ஆதரித்தும் கி.வீரமணி ஆற்றிய உரை வருமாறு:

கலைஞரின் மண்ணில் முதல் கூட்டத்தை தொடங்குகிறோம் என்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. இங்கே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோதிராமன் அவர்களை மாணவர் பருவத்திலிருந்தே அறிந்தவன். கொரோனா யாரை எப்போது தொற்றும் என்று சொல்லமுடியாது. அனைவரும் முகக்கவசம் அணியாமல் இருக்கலாமா? கொரோனாவை விடகொடிய நோய் வடக்கிலிருந்து வந்திருக்கிறது. அதிலிருந்து விடுபட வேண்டும். தி.மு.க.கூட்டணிதான் ஆட்சியமைக்கப் போகிறது என்றுமக்கள் முடிவு செய்து விட்டார்கள். திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக திகழ்கிறது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு
காமராசர், அண்ணா, கலைஞர்என்று வரிசையாக நமக்காக பாடுபட்ட தலைவர்கள். கல்வி நமது பிள்ளைகளுக்கு இருந்ததா? அப்பன் தொழிலை பிள்ளைகள் செய்யவேண்டும் என்ற குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி கொண்டு வந்தார்.அதை மீண்டும் கொண்டு வரத்தான்இப்போது ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது.கண்ணுக்குத் தெரியாத கொரோனா கிருமி போல ஆர்எஸ்எஸ்போன்ற கிருமிகள் நம்மை அழிக்கதுடிக்கின்றன. சாதி வெறி, மதவெறி போன்ற கிருமிகளை அழிக்கவல்லதுதான் திமுக தலைமையிலான கூட்டணி. இந்த கிருமிகளை தடுக்கும் தடுப்பூசி தான் தி.மு.க.; அதற்கான கிருமிநாசினி தான் திராவிடர் கழகம்.

1971 இல் கலைஞர் பெற்ற வெற்றியைவிட இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் அதையும் தாண்டி வெற்றியை பெறுவார். பாஜக போட்டி போடுவது நோட்டாவிடம் தான். விலைக்கு வாங்கி விடலாம்என்று எண்ணுகிறார்கள். விலைபோகாத தி.மு.க. அணி உறுப்பினர்களை வெற்றியடைய செய்ய வேண்டும்.இந்தத் தேர்தலில் இரண்டு அணிகள் தான். மற்றதெல்லாம் பிணி. ஒன்று கொள்கை கூட்டணி. மற்றொன்று பதவிக்கான கூட்டணி.முதுகெலும்பு இல்லாத இந்த ஆட்சியாளர்களை அகற்ற வேண்டும். இன்றைக்கு கல்வி உரிமை பறிக்கப்பட் டுள்ளது.புதிய கல்வி திட்டங்கள், நீட் தேர்வு என்று ஒவ்வொன்றையும் திணித்து வருகிறார்கள்.

இந்த ஆட்சி நீடிக்கலாமா?பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? தட்டிக் கேட்கும் காவல்துறைக்கும் பாதுகாப்பு இல்லை. காவல்துறை உயர் அதிகாரியால் பெண் போலீஸ் அதிகாரியே பாதிக்கப்பட்டுள்ளார்.தில்லியிலிருந்து வந்த அமித்ஷா அதிமுகவிடமிருந்து தொகுதிகளை பெற்றுக்கொண்டு நாங்கள் ஆட்சியமைப்போம் பங்கேற்போம் என்கிறார். இங்கே இருக்க கூடிய முதல்வர் சவால் விடுகிறார். எப்போது பாஜகவோடு சேர்ந்தீர்களோ அப்போதே உங்களது தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது.நமது பிள்ளைகளின் கல்விஉரிமைகளை நாசம் செய்துவிட்டார்கள். மீண்டும் குலக்கல்வி திட்டத்தைசெயல்படுத்த முனைகிறார்கள். இந்த ஆட்சியை அகற்றி, சூழ்ந்திருக்கும் இருளை போக்கி, ஒளி பிறக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறவைக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கி.வீரமணி  உரையாற்றினார்.இந்த கூட்டங்களில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின்பொறுப்பாளர்கள், தொண்டர்கள்பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

;