election2021

img

85 லட்சம் இளைஞர்க்கு என்ன பதில் எடப்பாடியாரே....

நான் பிரதமரானால் 2 கோடி பேருக்கு வேலை உருவாக்குவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார் மோடி. ஆனால், கொரோனா வருவதற்கு முன்பே இந்தியாவில் 45 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு வேலையின்மை பிரச்சனை அதிகரித்ததாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனத்தின் ஆய்வுகளே தெரிவித்தன. அந்த அறிக்கையைக்கூட வெளியே வரவிடாமல் தடுத்தார் மோடி. இப்போது கொரோனாவிற்குப் பிறகு இந்தியாவில் வேலையின்மையின் தேசிய சராசரி 23.5% ஆக இருக்கிறது.
தமிழகத்தில் வேலையின்மை விகிதமோ இந்தியாவிலேயே மிக அதிகமாக 49.8% ஆக இருக்கிறது. 2016-2017 ஆம் ஆண்டிலேயே, 50,000 சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டதால், 5 லட்சம் பேர் வேலை இழந்ததாக அதிமுக அரசாங்கம் சட்டமன்றத்திலேயே தகவல் வெளியிட்டது.    தமிழ்நாட்டில் 85 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலையில்லாமல் அல்லல்பட்டு கொண்டிருக்கையில், தமிழக அரசு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான பணப்பலன்களைத் தரமுடியாத காரணங்களால், ஓய்வு பெறும் வயதை 60 ஆக்கியுள்ளது.  கடந்த மே மாதம் புதிய அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தடையாணை விதித்த அதிமுக அரசாங்கம், தற்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 20 லட்சம் அரசு வேலைகளை உருவாக்குவோம் எனக் கதை விடுகிறது. 

நர்மதா தேவி

;