election2021

img

சபாஷ்.... இதுதான் தேர்தல் விழிப்புணர்வு

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில், வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் எரிவாயு உருளைகள், தண்ணீர் கேன்கள் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் விழிப்புணர்வு துண்டறிக்கை ஒட்டப்பட்டது.

100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வுகுறித்து காங்கயத்தில் தேர்தல் அலுவலகம் சார்பில் வாகனப் பேரணி, கோலப் போட்டி, துண்டறிக்கை விநியோகம் உள்ளிட்ட பல்வேறு வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு உருளைகள், குடிநீர் கேன்கள் ஆகியவற்றில், இவைகளின் சேமிப்புக் கிடங்குக்குச் சென்று காங்கயம் தொகுதி தேர்தல் அலுவலர் ரங்கராஜன், வட்டாட்சியர் சிவகாமி மற்றும்வருவாய்த்துறை ஊழியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.சபாஷ்... சிலிண்டர் விலை உயர்வால் கண்ணீர் விடும் பெண்களும்... தண்ணீரையும் விற்கத்தொடங்கிவிட்டனரே எனக் கோபத்திலிருக்கும் குடும்பத் தலைவர்களையும் இந்தப் பிரச்சாரம் நிச்சயம் ஈர்க்கும். மதவாத, சந்தர்ப்பவாதிகளை வீழ்த்த இதைவிட சிறந்த ஆயுதம் வேறெதுவும் இருக்கமுடியாது.
 

;