election2021

img

டிரெண்ட் ஆனது #GO BACK MODI

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாகப் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ளார். மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திங்கள் இரவிலிருந்தே #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.நீட், இந்தி திணிப்பு, விவசாய விரோத வேளாண் சட்டம், சிஏஏ உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வரும் மோடி அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்திப் பதிவிட்டு வருகின்றனர்.மேலும், பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கறுப்புக் கொடி காட்ட முடிவு எடுத்துள்ளனர். அதேபோல் பிரதமரின் தாராபுரம் வருகையையொட்டி மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அங்குள்ள விவசாயிகள் விளைநிலங்களில் கருப்பு பலூன்களை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிவருவது குறிப்பிடத்தக்கது.

;