election2021

img

தேமுதிக வாக்குகள் யாருக்கு?

கந்தர்வகோட்டை தொகுதியில் பெயர் சொல்ல விரும்பாத தேமுதிக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கேப்டன் (விஜயகாந்த்) இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் சரியான நிலைப்பாடு இல்லை.  கடைசி நேரத்தில் கூட்டணி குறித்து அனைத்து கட்சிகளுடன் பேசுகிறார். இதனால் தொண்டர்கள் பெரும் குழப்பம் அடைகின்றார்கள். தற்போது அமமுக வுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். அதிமுக, பாஜகவுடன்  கூட்டணி வைத்துள்ளது. இந்த இரண்டு கூட்டணிகளும் மக்களுக்கு நல்லது செய்யப் போவதில்லை. எங்கள் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சின்னதுரை மிகவும் எளிமையானவர். மற்ற எம்எல்ஏ க்களை போல் இல்லாமல் எளிதில் பழகக் கூடியவர். எனவே எங்களுடைய கூட்டணிக்கு இந்த முறை வாக்களிக்க மாட்டேன். திமுக அணியில் போட்டியிடும் சின்னதுரை அவர்களுக்கு எங்கள் குடும்ப வாக்குகளை செலுத்துவோம்” என்று கூறினார்.

பொன்மாறன்

;