election2021

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு....

சென்னை:
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியேற்றுள்ளது. 

அக்கட்சியின் தலைவர் பா.பட்டாபிராமன், செயலாளர் மா.சுந்தரராஜன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக சட்டமன்றத் தேர்தலை மதவெறி - பாசிச சக்திகளுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் இடையிலான யுத்தமாகவே இந்திய ஐக்கியகம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

ஒருசில கார்ப்பரேட் கயவர்களின் சுயலாபத்திற்காக மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் மக்களை பிளவுபடுத்தி,நம் நாட்டு வளங்களை கொள்ளையடிக்கும் பாசிசசக்திகளின் கோரப்பிடியில் நம்நாடு சிக்கியுள்ள துயரமான காலம் இது. அம்மதவெறி கும்பலுக்கு துணை நின்று தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடும் கொள்ளைக் கும்பலின் ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட ஒரு நல்வாய்ப்பாகவே எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ள நாங்கள் விரும்புகின்றோம்.
தமிழகத்தில் பலவீனமான அதிமுக மூலம் பாஜக தனது கால்களைப் பதிக்க முயற்சிக்கிறது. இச்சூழலில் பாஜக மற்றும் ஊழல் அதிமுக கூட்டணிக்கு எதிராகதமிழக மக்களின் உணர்வுகளையும் , எதிர்ப்பையும் ஒன்றுதிரட்டி போராட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. ஆதிக்க மதவெறி சக்திகளுக்கு எதிராக இடதுசாரி ஜனநாயக சக்திகளை ஒன்றுதிரட்டி போராட வேண்டும்  என்ற சீரிய லட்சியத்துடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட தோழர் எம்.கல்யாணசுந்தரம் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடந்து வரும்  எமது இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சிஇத்தேர்தலில் தாம் போட்டியிடுவதை தவிர்த்து, திராவிடமுன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை எவ்வித நிபந்தனையும், எதிர்பார்ப்பும் இன்றி முழுமனதுடன் ஆதரிப்பது என தீர்மானித்துள்ளது. இதன்படி தமிழகத்தில் கால்பதிக்க முயற்சிக்கும் பாஜகவின் முயற்சியை முறியடிக்க, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஜனநாயக கட்சிகள் உள்ளடங்கிய மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் தனது சகல சக்திகளையும் ஒருங்கிணைத்து பாடுபடுவது என்று இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

;