election2021

img

‘ஓட்டு’ வீட்டிலிருந்து கோட்டைக்குப் போக ஓட்டு கேட்கும் வேட்பாளர்....

புதுக்கோட்டை மாவட்டத்தின் வடக்கு கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த தோழர் எம்.சின்னதுரை, எங்கே ஒரு அநீதி என்றாலும், முதல் குரலாக ஓங்கி ஒலித்ததால், மார்க்சிஸ்ட் கட்சியில் படிப்படியாக உயர்ந்து மாவட்டச் செயலாளர் பொறுப்பு வகித்து, தற்போது மாநிலக்குழுவில் பயணிக்கிறார். மார்க்சிஸ்டாகத் தன்னை இணைத்துக் கொண்ட அன்று முதல் இன்று வரை பல நாட்கள் வீட்டுப்பக்கம் செல்வதே குறைவு. 

எப்போதாவது நடுராத்திரியில் வீட்டுக்குப் போய் அதிகாலையில் எழுந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பேசத் தொடங்கிவிடுவது வழக்கம். இவரது அரசியல் பயணம் முழுமையாக மக்களோடு மக்களாக இருந்ததால், கடந்த முறை மக்கள் நலக் கூட்டணியில் கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் போட்டியிட்டுக் கணிசமான வாக்குகளைப் பெற்றார்.இம்முறை, திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் துணையோடு களப்பணியில் கலக்கி வருகிறார்கள். 

வேட்பு மனுத் தாக்கலுக்குத் தயாரானபோது, திமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், தொழிற்சங்கத் தொழிலாளர்களும் எங்கள் பணத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யுங்கள் என்று அள்ளிக் கொடுத்துள்ளார்கள். அப்போது, அங்கிருந்தவர்கள் அனைவரும் நெகிழ்ந்து போனார்கள். வேட்பாளர் மட்டுமின்றிச் சுற்றி நின்ற நண்பர்களும் பணம் கொடுத்ததால், யாருடைய மனமும் வருந்தக் கூடாது என்பதால், அனைவரின் பணத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். பாகுபாடின்றிக் கூட்டணிக் கட்சியினர் ஒன்றாக இணைந்து ஊர்வலமாகச் சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.  

“ஒரு ஓட்டு வீட்டிலிருந்து கோட்டைக்குப் போக உங்கள் ஓட்டை கேட்கிறார், வாக்களித்து வாழ்த்தி அனுப்புங்கள் மக்களே!” -

பகத்சிங் 

நன்றி : நக்கீரன் இதழ்

;