election2021

img

கீழ்வேளூரில் நாகைமாலிக்கு ஆதரவாக தொல்.திருமாவளவன் பிரச்சாரம்...

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் கீழ்வேளூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகைமாலிக்கு ஆதரவாக கீழ்வேளூர் கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். பாஜகவையும் அதிமுகவையும் ஓட ஓட விரட்ட அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும், மத ரீதியாக, சாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்த நினைக்கும் அந்த கூட்டணி படுதோல்வியடையச் செய்ய வேண்டும் எனவும் திருமாவளவன் கேட்டுக் கொண்டார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வீ.மாரிமுத்து, திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அமிர்தராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

;