election2021

img

இதுதான் பழனிசாமி வாங்கிய இடம்...

7.12.2020 தேதியிட்ட ‘இந்தியா டுடே’ இதழில், தமிழகம் எந்தளவுக்கு தரைதட்டி நிற்கிறது என்பதை ‘இந்தியா டுடே’ இதழ் வெளிப்படையாக உடைத்துச் சொல்லி இருக்கிறது.

இரண்டு தர வரிசைப்பட்டியலை ‘இந்தியா டுடே’ வெளியிட்டுள்ளது. ஒன்று - 13 துறைகளில் ஒரு அரசாங்கத்தின் சமீபத்திய செயல்பாடுகள். இரண்டு - வளர்ச்சிக் குறியீடுகளில் சமீப கால மாற்றங்கள் ஆகிய இரண்டு தர வரிசைப் பட்டியலை ‘இந்தியா டுடே’ வெளியிட்டுள்ளது. இந்த இரண்டையும் வைத்து சிறந்த செயல்பாடு கொண்ட அரசாங்கம் என்ற தரவரிசையை வெளியிட்டுள்ளது. இந்த சிறந்த செயல்பாட்டுக்குரிய அரசாங்கம் என்ற பட்டியலில் பழனிசாமியின் அரசாங்கத்தின் பெயரே இல்லை. சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதில் மட்டும் தமிழகம் இடம் பெற்றுள்ளது.

ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பது ஓராண்டில் உருவாவது அல்ல. அது ஐம்பது ஆண்டுகளாக சிறிது சிறிதாக வளர்ந்த வளர்ச்சி! அதேபோல் இன்னொரு தரவரிசைப் பட்டியலையும் ‘இந்தியா டுடே’வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பழனிசாமி அரசாங்கத்தின் பெயரே இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய வளர்ச்சியைக் கொண்டு வருவதன் மூலமாக அடுத்த கட்டத்துக்கு முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் மொத்தம் 20 மாநிலங்கள் உள்ளன. இதில் பழனிசாமியின் அரசு, 19 ஆவது இடத்தில் இருக்கிறது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு டிட்கோ, சிப்காட் ஆகியவை முக்கியப் பங்கு ஆற்றியதாக ‘இந்தியா டுடே’ எழுதியுள்ளது. டிட்கோ - 1965 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. சிப்காட் - 1971 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இப்படி ஒன்றை பழனிசாமியால் உருவாக்க முடியவில்லை. ‘இந்தியா டுடே’ வெளியிட்ட விவரங்களின் அடிப்படையில் பழனிசாமியின் ஆட்சியின் நிலைமை இதுதான்:

* உள்கட்டமைப்பில் 20 ஆவது இடம்

* ஐந்து ஆண்டுகளின் செயல்பாட்டில் 19 ஆவது இடம்

* விவசாயத்தில் 19 ஆவது இடம்

* சுற்றுலாவில் 18 ஆவது இடம்

* உள்ளடக்கிய வளர்ச்சியில் 18 ஆவது இடம்

* தொழில் முனைவோர் முன்னேற்றத்தில் 14 ஆவது இடம்

* ஆட்சி நிர்வாகத்தில் 12 ஆவது இடம்

* தூய்மையில் 12 ஆவது இடம்

* சுகாதாரத்தில் 11 ஆவது இடம்

* கல்வியில் 8 ஆவது இடம்

* பொருளாதார வளர்ச்சியில் 8 ஆவது இடம்

* சுற்றுச்சூழலில் 6 ஆவது இடம்

* சட்டம் - ஒழுங்கில் 5 ஆவது இடம்

இதுதான் பழனிசாமி வாங்கிய இடம்!

தமிழகத்தை வளப்படுத்தியது நான் எனக் கூற பழனிசாமிக்கு வெட்கமாக இல்லையா? 

முரசொலி தலையங்கத்தில் இருந்து...

;