election2021

img

இந்தக் கொடி நம் சொந்தக் கொடி....

இந்தக் கொடி நம் சொந்தக் கொடி

இந்தக் கொடி - நம்
சொந்தக் கொடி!
சுத்தி அரிவாள் நட்சத்தி ரக்கொடி!
சுத்தச மத்துவத் தத்து வக்கொடி!
முதலாளியத்தை முடிக்கும் அதிர் வெடி
போல்பட படக்குது பாடம் படி!-
அதில் பாடம் படி!
(இந்தக்)
ஆறுதல் அளிக்கும் கொடி - நாட்டில்
மாறுதல் நிகழ்த்தும் கொடி!
சமத்துவத் தேரின் முடி- அதன்
உச்சியில் தவழும் கொடி!
வருதே வசந்தக் கொடி!
இரவே இனி நீ விடி!
இந்திய வைகறை இதுதான் எனும்படி,
வண்ணம் ஏந்தி வரும் கொடி! இதைப் பிடி!
(இந்தக்)
எதிரிக்கு நெத்தியடி- இது
எங்களுக்குத் தாயின் மடி!
வர்க்கப் பகையைப் பொடி(ப்)- பொடி
ஆக்கிட வந்த கொடி!
சமத்துவக் கனிதரும் கொடி!
சரண்அடை அதன்திரு வடி!
“இந்திய தேவியை சிவப்பாய் சிலை வடி!”
என்குது பார் கொடி கரம்அ சைத்தபடி!
(இந்தக்)
ஏழையின் வாசற்படி -அதில்
தோரணம் ஆன கொடி!
உழைப்பவர் தொப்புள்கொடி-
உறவாய் வந்த கொடி!
ஏகாதிபத்திய நெடி
ஏதினி மேல்?அதை முடி!
கொடி மட்டுமா? அதைக் கட்டிய கோல் தடி
உழைப்பவர்க் கெல்லாம் ஊன்று கோலடி!
(இந்தக்)

கவிதையாளர் : நவகவி

                         *************

வாழ்க செங்கொடி வாழ்கவே!

செங்கொடி  செங்கொடி செங்கொடி
சத்தியம் உண்மை பேசும் கொடி
உழைக்கும் வர்க்கப் போர்க்கொடி
தொழிலாளர் பக்கம் நிற்கும்கொடி (செங்கொடி)

அதர்மம் எவ்வடிவில் வந்தாலும்
அஞ்சாது  எதிர்த்து நின்றிடுமே
சமரசம் எதுவும் செய்யாமல்
சமநீதி நியாயம் வென்றிடுமே (செங்கொடி)

தோழரில் ஓடிடும் செங்குருதி
இசையென துடித்திடும் இதயமதில்
இவை  இரண்டும் நிற்கும் இறுதிவரை
மக்கள் பணியை செய்தனரே (செங்கொடி)

புது நெல்லும் புது நாத்தும்
வாலிப நெஞ்ச இளங்குருத்தும்
செங்கொடி காக்கும் யுத்தமதில்
உத்தம வாழ்வை சொரிந்தனரே  (செங்கொடி)

மலர் மின்னல் கண்டு தாழை
மலர்வது போலே அவர்தம் செய்த
செயல் நினைந்து நினைந்து
நெஞ்சம் என்றென்றும் மகிழ்ந்திடுமே     (செங்கொடி)

கவிதையாளர் : எம்.ஆர்.வி.ஜீவா

                         *************

அசைவற்ற பழைய பூமியை உலுக்கிடுவீர்கள்!

ஆண்டுகள் பத்து ஆயின.
உயிருடனிருந்தேன்,     உயிர்ப்போடல்ல.
நப்பாசை,வாழ்வின்மீச்சிறு நப்பாசையும்     தப்பாசையாய் .
மனதின்வெறுமை வாழ்வின் வெம்மை     விரக்தி     விளிம்பில்.

ஊழலும் பொய்யும் கொடூரமும்
நூற்றாயிர வீரர்களின் வாய்களை
மூட்டிப்பூட்டி முடக்கினவே.

கோடிமக்களின்  குமுறல்கள்
துன்புறுத்தல் தாளாமல்
எதிரொலியின்றி அடங்கினவே.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருகணமும்
என்னுடலை தின்றுதீர்த்துக்களித்தனரே. 

தேங்கிய குட்டையாய் சிந்தனையும்
இறுகிய கட்டையாய் இதயமும்

நாளும் இல்லை,
நம்பிக்கையுமில்லை
நாயும் பிழைக்கும் வாழ்க்கையே
நமக்கு வாய்த்ததாய் 
உணர்ந்தேன், உண்மை.

பொருத்தமற்ற இவ்வாழ்வை 
பொறுக்கமுடியாதென புரிந்திட்ட வேளை
பார்த்தேன்உம்மை, தோழர்களே.

கனவுக்கு மீண்டும் திரும்புகிறேன்.

இப்போது புரிகிறது,
ஃபீனிக்ஸ் பறவை நீங்கள்.
சாவென்பதே கிடையாது உமக்கே!
இறக்கமுடியாது உம்மாலே!
சாவைப்பற்றித் தெரியாதவர் நீவிர்.

இருளைத் தாண்டிய பெருநெருப்பு
நீள் விண்ணில் சிறகுவிரித்த விண்மீன்கள்
விடுதலை முழக்கம் விண்ணதிரும். 

இதுவரை இல்லாத அளவில்
இப்பொழுது நம்புகிறேன்.

நீங்கள் செய்துகாட்டுவீர்கள்.
அசைவற்ற பழைய பூமியை
உலுக்கிடுவீர்கள். 

அவனை பின்னே தள்ளி முன்னேறுவீர்கள்,
சுரண்டலற்ற சமூகப்பாதையிலே.

வாழ விரும்புகிறேன்.
வீரர் உமது முகங்களைப் பார்த்தபடி.

கவிதையாளர் : மேற்குவங்க கம்யூனிஸ்ட் கட்சித் தோழரின் கவிதை

                         *************

எது இன்று உன்னுடையதோ..?

எது இன்று உன்னுடையதோ..?
எ துது ஊர்ந்ததோ
அது நன்றாகவே ஊர்ந்தது.
எது குனிகிறதோ
அது நன்றாகவே குனிகிறது.
எது தவழ்ந்திட நினைக்கிறதோ
அது நன்றாகவே தவழ்ந்தது.

உன்னுடையதை எதை இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டுவந்தாய்
அதை நீ இழப்பதற்கு?
எதை நீ ஜெயித்திருந்தாய்
அதை நீ தோற்பதற்கு?

எதை நீ எடுத்துக்கொண்டாயோ
அது பன்னீரிடமிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ
அது சம்பந்திக்கே லம்ப்பாகக் கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை வேறொருவருடையதாகிறது. 

;