election2021

img

விடாக்கண்டன்.... கொடாக்கண்டன்....

தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். இந்த போடிக்கும் வந்து பேசியிருக்கிறார். அப்போது பன்னீர்செல்வத்தை மறைமுகமாகத் தாக்கி விட்டுச் சென்றிருக்கிறார்.

அவர் பன்னீர்செல்வத்தை, “ஓ.பி.எஸ். அவர்கள் இந்த மாவட்டத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை” என்று பேசியிருக்கிறார். ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் இருவரும் எப்படி இருந்தார்கள். அதை இந்த நாட்டு மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘விடாக்கண்டன், கொடாக்கண்டன்’. விடாக்கண்டன் ஓ.பி.எஸ்., கொடாக்கண்டன் இ.பி.எஸ்.பழனிசாமி, அவரை இந்த மாவட்டத்தின் கொடை என்று சொல்லி, நீங்கள் இங்கேயே இருங்கள், வெளியில் வந்து விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். இது புரியாமல் ஓ.பி.எஸ். தலையாட்டிக் கொண்டிருந்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, அ.தி.மு.க.விற்குத் துரோகம் செய்தவர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார். அவ்வாறு பார்த்தால்அ.தி.மு.க.விற்கு முதன்முதலில் துரோகம் செய்தவர் யார்? ஆட்சிக்கு எதிராக 11 ஓட்டுப் போட்டார்களா? இல்லையா? அந்த ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்ட 11 பேரும் டெபாசிட் வாங்கலாமா?

இப்போது ஓ.பி.எஸ்-ஐ எல்லோரும் பெரிய தியாகி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையாக அவர் தியாகி அல்ல, பெரிய புத்திசாலி. ஏனென்றால் தோற்கப் போகின்ற அ.தி.மு.க.விற்கு பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொன்னார்.அதேபோல, அரசியலில் சிலருக்குத்தான் வாய்ப்புக் கிடைக்கும். ஓ.பி.எஸ்.க்கு ஒருமுறை அல்ல, மூன்று முறை முதலமைச்சர் வாய்ப்புக்கிடைத்தது. அவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திஇந்தத் தொகுதிக்கு ஏதாவது செய்தாரா? இந்தநாட்டுக்கு ஏதாவது செய்தாரா? ஜெயலலிதா விற்கு உண்மையாக இருந்தாரா?ஒரு தியான நாடகத்தை நடத்தினார். பதவிக்காக தர்மயுத்தம் நடத்தினார். ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அதை விசாரிக்க விசாரணைக் கமிஷன் வேண்டும் என்று கேட்டாரா? இல்லையா?

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உட்கார்ந்து 40 நிமிடம் தியானம் செய்தார். ஆன்மாவோடு பேசினார். “உங்கள் சாவுக்கு யார் காரணம்? அதைக் கண்டு பிடிக்காமல் விடமாட்டேன். அதற்குவிசாரணைக் கமிஷன் வேண்டும்” என்று சொன்னாரா? இல்லையா?

உடனே விசாரணைக் கமிஷன் வைத்தார்கள்.அவ்வாறு விசாரணை கமிஷன் வைத்தவுடன் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தார்கள். அதற்குப்பிறகு அதை மறந்து விட்டார். அந்தவிசாரணைக் கமிஷன் அவரைப் பலமுறை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியது. அவர் ஒருமுறையாவது சென்று அந்த விசாரணைக் கமிஷன் முன் ஆஜரானாரா? இல்லை.

ஜெயலலிதா இருந்தவரை நின்று தரையைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டிருந்தவர். இப்போதுஜெயலலிதாவை தலைமுழுகி விட்டார். ஜெயலலிதாவிற்குத் துரோகம் செய்த இவரை இந்தத்தேனி மாவட்ட மக்கள் புரிந்துகொள்ள வேண்டாமா? அம்மையார் ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்தவரை இந்தத் தேனி மாவட்டத்தி லிருந்து விரட்ட வேண்டுமா? வேண்டாமா?இப்போது தேர்தல் வருகிறது என்று சொன்னவுடன் வாக்கு வாங்குவதற்காக, மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு பெரிய நாடகத்தை நடத்தினார்கள்.அது சட்டமன்றத்தின் கடைசிக் கூட்டத்தொடர். அதுதான் அவர்களுக்குக் கடைசிச் சட்டமன்றக் கூட்டத்தொடர். இனிமேல் சட்டமன்றத்திற்கு அவர்கள் எதிர்க்கட்சியாகக் கூட வரமுடியாது. அந்தக் கூட்டத்தொடரில் ஓ.பி.எஸ்.ஐவைத்துக்கொண்டு உள்ஒதுக்கீடு என்ற ஒரு சட்டத்தை பழனிசாமி கொண்டு வந்து நிறைவேற்றினார். அப்போது அமைதியாக அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ஓ.பி.எஸ்.

ஆனால் இப்போது அது நிரந்தரச் சட்டம் அல்ல, தற்காலிகமான சட்டம்தான் என்று சொல்கிறார். அவர் இதை நேற்றைய தினம் ‘தி இந்து’ பத்திரிகையில் கொடுத்திருக்கும் சிறப்புப் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.அதில் அவர் என்ன தெளிவாகச் சொல்கிறார்என்றால், சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி நிறைவேற்றிய உள்ஒதுக்கீடு பிரச்சனை என்பது நிரந்தரமல்ல, தற்காலிகம்தான் என்றுசொல்லியிருக்கிறார். ஆனால் அந்தச் சட்டம் நிறைவேறிய போது அருகிலிருந்து கைதட்டி வரவேற்றிருக்கிறார். அவர் மட்டுமல்ல, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்களும் அது தற்காலிகம் என்று பேசியிருக்கிறார்.

உடனே இன்றைக்கு மருத்துவர் அய்யா - பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்கள் ஒரு செய்தி சொல்லி இருக்கிறார். “நான் ஓ.பி.எஸ். அளித்த அந்தப்பேட்டியைப் படித்தேன். அதிர்ச்சிக்கு ஆளானேன். உடனடியாக நான் முதலமைச்சரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் அவ்வாறு அல்ல, வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தரமானதுதான்” என்று சொல்லியிருக்கிறார்.” இது என்ன கூத்து!எனவே மக்களை ஏமாற்றுவதற்காக, எப்படியாவது வாக்கு வாங்க வேண்டும் என்பதற்காக ஒரு நாடகத்தை இன்றைக்கு அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? தங்களது தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள். நிச்சயமாக நீங்கள் தான் வருகின்ற 6 ஆம் தேதி ஏமாறப்போகிறீர்கள். அது உறுதி.

மோடியைப் பார்த்து ஓ.பி.எஸ். “உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான்” என்று பாராட்டிப் பேசுகிறார். இவ்வளவு நாட்களாக பத்திரிகைகளில் ஓ.பி.எஸ். தான் ஜல்லிக்கட்டு நாயகன் என்று விளம்பரம் அவரே கொடுத்துக்கொண்டிருந்தார். இப்போது ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான் என்று சொல்கிறார். இது என்ன நடிப்பு. சினிமாவில் ஒரு டயலாக் வரும், “உலக மகா நடிப்புடா சாமி” அதுபோலத்தான் இருக்கிறது.ஜல்லிக்கட்டு வந்ததற்குக் காரணம், நம்முடைய இளைஞர்கள்தான், அரசியல்வாதிகள் அல்ல. அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் ஜல்லிக்கட்டு வந்தது. எனவே அப்படிப்பட்ட இளைஞர்களை ஓ.பி.எஸ். அவர்களே தயவு செய்து கொச்சைப் படுத்தாதீர்கள். அந்தப் போராட்டத்தை எப்படியாவது கலைக்க வேண்டும், கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி, காவல்துறையினரை வைத்துத் தடியடி நடத்தி அங்கிருந்த ஆட்டோக்களை எரித்து கொடுமைப் படுத்தினீர்களே… அது அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் வந்ததே… அதை மக்கள் மறந்து விட்டார்களா? நீங்கள் மோடி காலில் விழுந்து கொள்ளுங்கள் அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அவரை ஆதரியுங்கள் அதைப்பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. ஆனால் என்ன பேச வேண்டும் என்ற விவஸ்தை வேண்டாமா? எதை வேண்டுமானாலும் பேசி விடலாமா?

;