election2021

img

ஸ்லீப்பர் செல்... போட்டியாளர்

டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல் கடம்பூர் ராஜூ என்று சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் குற்றம் சாட்டினார்.

2018-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி  விளாத்திகுளத்தில் கட்சியின் 47 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற விளாத்திகுளம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மார்க்கண்டேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  “ராஜூ அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தினகரன் முகாமுக்கு அனுப்புகிறார். டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல் கடம்பூர் ராஜூ.  அவர் தமக்கான “சீட்டை” கட்சியின் பின் வாசல் மூலம் பெற்றார் என்றார்.இதற்குப் பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ஒரு நபரின் கருத்துக்கு எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்‘ விரக்தியிலிருந்து ’பேசுகிறார் என்று விளக்கமளித்தார்.இன்றைக்கு கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரனும், கடம்பூர் ராஜூ-வும் தேர்தலில் வேட்பாளராக மோதிக்கொள்வது தான் வேடிக்கை.

;