election2021

img

சீத்தாராம் யெச்சூரி சொன்ன குட்டிக்கதைகள்....

ஒரு தொழிலாளி தனது மாத ஊதியத்தைபெற்றுக்கொண்டு பேருந்தில் வீட்டுக்கு பயணித்தார். பேருந்தில் கூட்டம்அதிகமாக இருந்தது. அந்த தொழிலாளியைப் போலவே பலரும் தங்களது மாத ஊதியத்துடன்அந்த பேருந்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். நடத்துனர் பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த தொழிலாளியிடம் பயணச்சீட்டுக்கான கட்டணத்தை கேட்ட போது டிக்கெட் வாங்குவதற்காக அந்ததொழிலாளி தனது பாக்கெட்டில் கை வைத்து பார்த்த  போது மாத ஊதிய பணம் இல்லை. யாரோ ஒரு திருடன் அவரது மாத ஊதியத்தை பிக்பாக்கெட் அடித்துவிட்டான். அதிர்ந்து போன அந்த தொழிலாளி பணமின்றி தவித்த போது பேருந்தை நடத்துனர் நிறுத்தி பாதியில் அந்த தொழிலாளியை இறக்கிவிட முயற்சிக்கிறார். அப்போது அந்த தொழிலாளிக்கு உதவ பிற தொழிலாளர்கள் தங்கள் பைகளில் பணத்தை தேடும் போது அவர்களது பாக்கெட்டிலும் பணமில்லை. அவர்களது பணமும் பிக்பாக்கெட் செய்யப்பட்டது. இந்நிலையில் அனைவருக்குமான டிக்கெட்டுக்களை ஒரு நபர் வாங்கிக்கொள்கிறார். அனைவரும் அந்த நபரிடம் நன்றிப் பெருக்கோடு இந்தகலியுக காலத்தில் இப்படி ஒரு மகானுபாவனா என்று உருகினர். ஆனால்டிக்கெட் வாங்கி நல்லவர் போல தன்னைக் காட்டிக்கொண்டவர் தான் அந்த தொழிலாளர்களின் பணத்தை பிக்பாக்கெட் செய்த ஜேப்படித்திருடன். மக்களிடம் அதிமுகவும், மோடி அரசாங்கமும் அப்படித்தான் ஜேப்படி செய்கின்றன. மோடி அரசு 7 ஆண்டுகள் மக்களிடம் கொள்ளையடித்தது, அதிமுக அரசு 10 ஆண்டு கொள்ளையடித்தது. ஆனால் இன்றைக்குநான் அதைச் செய்கிறேன் இதை செய்கிறேன் என்று தேர்தலில் வாக்குறுதி கொடுப்பது வாக்குகளை ஜேப்படி செய்யத்தான்.

                                ****************

விஜயநகரப் பேரரசில் அஷ்டதிக் கஜங்கள் எனப்படும்எட்டு அமைச்சர்கள் மன்னர் கிருஷ்ணதேவராயர் அரசவையில் இருந்த போது பாரசீக கவிஞர் ஒருவர் வருகை தந்தார். அவர் அவர் தனக்கு 16 மொழிகள் தெரியும்உன்னுடைய அமைச்சர்களில் யாராவது ஒருவர் எனது தாய்மொழி எது என்று கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும் என்று கிருஷ்ண தேவராயரிடம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்துகிருஷ்ணதேவராயர் ஏழு அமைச்சர்களை வரவழைத்து ஆலோசித்தபோது எங்களால் முடியாது என்று கூறிவிட்டனர். அதன்பிறகு தெனாலிராமனை வரச்சொல்லி நாட்டுக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை துடைக்க வேண்டும்என்று சொன்ன போது, ஒரு நாள் இரவு எனக்கு அவகாசம் கொடுங்கள் என்றுதெனாலிராமன் கேட்டார். மன்னர் கிருஷ்ண தேவராயர் அனுமதியளித்தார். அன்றுஇரவு உறங்கிக் கொண்டிருந்த பாரசீக கவிஞர் மீது மிகவும் குளிர்ந்த தண்ணீரைதெனாலிராமன் ஊற்றினார்.  அப்போது அந்த பாரசீகக் கவிஞர் தனது தாய் மொழியான பாரசீக மொழியில் ஐயோ அம்மா என்று அலறி எழுந்தார். தெனாலிராமனின் இந்த சமயோசித புத்தியை கிருஷ்ணதேவராயர் பாராட்டினார்.

 தாய் மொழியின் அவசியம் குறித்து இந்தக்கதை எடுத்துரைக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழி உயிர்நாடி போன்றது. ஆனால்  இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழிகளை மக்களின் தாய்மொழிகளைமோடி அரசு அழிக்கப் பார்க்கிறது.  

பழனி. திண்டுக்கல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதிலிருந்து...

;