election2021

img

சீல் வைக்கப்பட்ட ‘டேக்’ வெளியில் கிடந்ததால் அதிர்ச்சி... விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற கோரிக்கை....

புதுக்கோட்டை:
சீல் வைக்கப்பட்ட டேக் வெளியில் கிடந்ததாலும், எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளை தொடர்ந்து அலட்சியம் செய்வதாலும்விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை உடனடியாக மாற்ற வேண்டுமென திமுக, அமமுக வேட்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்திய முகவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கையொப்பமிட்ட டேக் ஒன்று வாக்கு எண்ணும் மையத்தில் கிடந்தது புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அமமுக, திமுக வேட்பாளர்கள் இதுகுறித்து விளக்கம் கேட்டுதேர்தல் நடத்தும் அலுவலரிடம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதம் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளைச் சேர்ந்த 1,902 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் புதன்கிழமை காலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உமா மகேஸ்வரி தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் ஒவ்வொன் றாக சீல் வைக்கப்பட்டன.

கையெழுத்திடப்பட்ட டேக் வெளியில் கிடந்தது
அப்போது, விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட மாத்தூர் பகுதியில் உள்ள 27 ஆவது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட முகவர்கள் மற்றும்  தேர்தல் நடத்தும் அலுவலர்கள்கையெழுத்துகளுடன்கூடிய டேக் ஒன்றுவாக்கு எண்ணும் மையத்தில் கிடந்துள்ளது.இதைக் கண்டு சந்தேகம் கொண்ட அவர்கள்விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உமா மகேஸ்வரியிடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்டதேர்தல் பொது பார்வையாளர் ரகு, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி, விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலதண்டாயுதபாணி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்னதாக வாக்குச்சாவடியில் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும், அப்போது, விவிபேட் கருவியில் இருந்து சேகரிக்கப்படும் வாக்கு சீட்டுகளை ஒரு கவருக்குள் வைத்து, அதன் மீது முகவர்கள் கையெழுத்துகளுடன்கூடிய டேக் சுற்றப்பட்டு சீல்வைக்கப்படும், அந்த டேக் சீல்தான் தவறுதலாக இங்கு கிடந்துள்ளது. இதற்கும், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’ என விளக்கம் அளித்தனர். எனினும், இந்த விளக்கத்தை திமுக, அமமுக கட்சியினர் ஏற்க மறுத்தனர்.இதையடுத்து, மாவட்ட தேர்தல் பார்வையாளர் ரகு உத்தரவின்பேரில் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உமாமகேஸ்வரி தலைமையில் வாக்கு எண்ணும்மையத்தில் விராலிமலை தொகுதிக்கான பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு, அங்கிருந்த 27 ஆவது வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரம் ஆய்வு செய்யப் பட்டது. அப்போது, அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீல் பிரிக்காமல் இருப்பதை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆட்சேபணை தெரிவித்து வந்தோர் சமாதானம் அடைந்தனர்.

தேர்தல் நடத்தும்  அதிகாரியை மாற்றக் கோரிக்கை
பின்னர், வாக்கு எண்ணுவதற்கு முன்னதாகவே அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக இருந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  மேலும் விராலிமலை தொகுதியில் பல புகார்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்பால தண்டாயுதபாணியை வாக்கு எண்ணுவதற்குள் மாற்ற வேண்டும், வாக்கு எண்ணும்மையத்தில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும்என அமமுக, திமுகவினர் கோரிக்கை தெரிவித்தனர். அனைத்து கோரிக்கைகளும் தேர்தல் ஆணையர்களுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து திமுக மற்றும் அமமுகவை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகையில்: விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுவதால் ஏற்கனவே பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இந்நிலை
யில், அத்தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த மையத்தின் வெளியே முகவர்கள் மற்றும் வாக்குப்பதிவு மைய அலுவலர்களின் கையொப்பமிடப்பட்ட ஒரு டேக் சீல் கிடந்தது தங்களுக்கு அதிர்ச்சிஅளிக்கிறது. மற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களின் நிலையை அறிவதற்காக தான்தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டோம். தங்களின் கோரிக்கையை புரிந்துகொண்ட மாவட்ட தேர்தல் அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீல் வைத்த அறையை திறந்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை காண்பித்தார். அதில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் டேக் பேப்பர் உள்ளது. எனினும் வாக்குஎண்ணிக்கை நடைபெறும் நாளில் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் வெளிப்படைத் தன்மையோடு திறந்து காட்டவேண்டும். மேலும், விராலிமலை தொகுதிக் கான தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். (ந.நி)

;