election2021

img

சொன்னார்களே... செய்தார்களா...

இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். கூட்டணி பல வாக்குறுதிகளை முன்வைத்து 2021 தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். ஒரு ஆட்சியின் நம்பகத்தன்மை அது கடந்த காலங்களில் தந்த வாக்குறுதி களை எந்தஅளவுக்கு நிறைவேற்றியுள்ளது என்பதைப் பொருத்துத்தான் அமையும். 2016ல்  அ.இ.அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கை மூலம் தந்த, ஆனால் நிறைவேற்றுவது குறித்து ஒரு துரும்பும் அசைக்காத சில வாக்குறுதிகள்:

$    அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச கைப்பேசி வழங்கப்படும்.

$    அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் ஏழை/எளிய/  நடுத்தர மக்கள் பாதிக்கப்படாவண்ணம் பாதுகாக்கப்படுவர்.

$    ஆவின் பால் ஒரு லிட்டர் ரூ.25க்கு வழங்கப்படும்.

$    மாநிலத்தின் அனைத்து பகுதி ஏழை மக்களுக்கும் அம்மா குடிநீர்  திட்டம் மூலம் மினரல் வாட்டர் வழங்கப்படும்.

$    வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு 3 சென்ட் இடம் வழங்கப்படும்.

$    ஏழை/எளிய/நடுத்தர குடும்பங்கள் அனைத்துக்கும் அம்மா வங்கி அட்டை (Amma Banking Card) வழங்கப்படும். இதன் மூலம் அனைத்து வங்கி பரிவர்த்தனைகள் மட்டுமல்ல; இதர பல திட்டங்களும் அமலாக்கப்படும்.

$    வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு அரசே கடனை திருப்பி செலுத்தும்.

$    பொங்கல் திருநாளுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் துணிகள் வாங்க ரூ.500 இலவச கூப்பன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்.

$    மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு  கொண்டுவரப்படும்.

$    2016 முதல் 2021 வரை 5 ஆண்டுகளில் ரூ.40,000 கோடி  பயிர்க்கடன் தரப்படும்.

$    பண்ணை மகளிர் குழுக்கள் உருவாக்கப்பட்டு விவசாய உற்பத்தி  அதிகரிக்கப்படும்.

$    பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய அனைத்தும்   செய்யப்படும்.

$    வாழை/இளநீர்/திராட்சை/மாம்பழம் /காய்கறிகள் விற்பனைக்கு  சிறப்பு வணிக வளாகங்கள் உருவாக்கப்படும்.

$    விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்கள் எடுத்து செல்லப்படும் திட்டங்கள் அனுமதிக்கப்படாது.

$    மீனவர் சமுதாயத்தை பழங்குடி இன பட்டியலில் சேர்க்க மத்திய  அரசை வலியுறுத்துவோம்.

$    கச்சத்தீவு மீட்டெடுக்கப்படும்.

$    தமிழகத்தில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் இலவச   வைஃபை வசதி செய்துதரப்படும்.

$    தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவதற்கு தீர்வு காணப்படும்.

$    24 மணி நேரமும் செயல்படும் 42 தாய்-சேய் நல மையங்கள்   உருவாக்கப்படும்.

$    2016-21 காலத்தில் 13000 மெ,வா. அனல் மின் நிலையங்கள்/2500 மெ.வா. புனல் மின் நிலையங்கள்/3000 மெ.வா. சூரிய சக்தி மூலம் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும்.

$    டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கருத்துகளை பரப்ப Dr. Ambedkar Foundation நிறுவப்படும்.

$    மதம் மாறிய SC/ST பிரிவினர் பட்டியலின மற்றும் பழங்குடி பிரிவில் உள்ள சலுகைகள் பெற மத்திய அரசை வலியுறுத்தப்படும்.

$    புதிய ஜவுளி பூங்காக்களும் பட்டு ஜவுளி பூங்காக்களும்   உருவாக்கப்படும்.

$    தமிழ்நாட்டில் சில்லறை வணிகத்தில் ஒரு போதும் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படாது.

$    பெரு நகரங்களை ஒட்டி துணை கோள் நகரங்கள் உருவாக்கப்படும்.

$    சென்னை/கோவை/மதுரை/திருச்சி ஆகிய நகரங்களில் மோனோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும்.

$    மூத்த குடி மக்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி மாநிலம்  முழுவதும் அமலாக்கப்படும்.

$   தமிழை இந்திய ஆட்சி மொழியாகவும் உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அமலாக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்படும்.

$    அம்மா ஈடு உத்தரவாத நிதியம் (Amma Collateral Guarantee Fund) ரூ.100 கோடி செலவில் உருவாக்கப்படும். அதன் மூலம் சிறு/குறு தொழில் முனைவோர்கள் ஈடின்றி கடன் பெற வழிவகை செய்யப்படும்.

$    சிறு/குறு தொழில் முனைவோர்களுக்கு ரூ.500 கோடியில் அம்மா முயற்சி மூலதன நிதியம் (Amma Venture Capital) உருவாக்கப்படும்.

$    தமிழகத்தில் நீண்ட நாட்களாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பட்டியல் இன்னும் நீளும். 2016ல் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்கள்தான் இப்பொழுது வாய்ப்பந்தல் போடுகின்றனர். 

ஜெயலலிதா மறைந்தவுடன் அவர் அளித்த வாக்குறுதிகளும் மறைந்துவிட்டன என இ.பி.எஸ்- ஓ.பி.எஸ். நினைக்கின்றனரா? “அம்மாவின் ஆட்சி” நடத்துகிறோம் என்பவர்கள் அந்த “அம்மா” தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்தது ஏன்?

வாக்குறுதி காக்க தவறிய இவர்களுக்கு ஏப்ரல் 6 அன்று பாடம் புகட்டுவோம்!  

ஆட்சியை மாற்றுவோம்!!

;