election2021

img

ரூ.1 லட்சம் கோடி ஊழல்...

அதிமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்று அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது. முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது அறப்போர் இயக்கம்.ஒரு யூனிட்டுக்கான மின்சாரத்தை ரூ.2 முதல் ரூ.2.50 வரை கூடுதலாக விலை கொடுத்து தமிழக அரசு வாங்குகிறது. ஒரு நாளைக்கு 6.9 கோடி யூனிட் மின்சாரம் வாங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது. இதில் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2013 முதல் 2016 வரையிலான கால கட்டத்தில் ரூ. 30,072 கோடியும் 2016 - 2021 கால கட்டத்தில் ரூ.24,325 கோடியும் மொத்தத்தில் ரூ. 54,397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் 7 ஆண்டுகளில் இந்த இழப்பு ரூ.1 லட்சம் கோடியை எட்டும்.இவ்வாறு அறப்போர் இயக்கத்தினர் கூறியுள்ளனர்.

;