election2021

img

ராஜன் செல்லப்பா “பாஸாக” மாட்டார்...

மதுரை வடக்குத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து தப்பித்தால் போதுமென ஓட்டம் பிடித்து தற்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் ராஜன் செல்லப்பா.

இவருக்கு எப்படி அதிமுக தலைமை சீட் வழங்கியது என புருவம் உயர்த்துகின்றனர் அதிமுக நிர்வாகிகள்.அதற்கு அவர்கள் கூறும் காரணம் 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7-ஆம் தேதி அவர் கட்சியை கடுமையாக விமர்சித்தது தான் என்றனர்.
ராஜன் செல்லப்பா அப்படி என்ன தான் கூறினார். “அதிமுக.வில் வலுவான ஒற்றைத் தலைமை வேண்டும். முடிவு எடுக்கிற பொதுச்செயலாளர் பதவியும் அதிகாரமும் அவருக்கு வேண்டும். ஆளுமை திறனுடைய தலைவர் இல்லை.  கட்சியில் எல்லோருக்கும் நெருடல் இருக்கிறது. அதிமுகவில் யாரிடம் அதிகாரம் இருக்கிறது எனத் தெரியவில்லை. நான் சொல்லும் கருத்துக்கள் கட்சியின் உட்பிரச்சனையல்ல.  தொகுதிகளை அதிமுக இழந்துவிட்டது.” என்றார். அவர் அத்தோடு நின்றுவிடவில்லை,  2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் தேதி செய்தியாளர்களிடம் ராஜன் செல்லப்பா கூறியதாவது: “சசிகலாவை நீக்கியதில் எனக்கு விருப்பமில்லை என்பதைவிட, அதைத் தவிர்க்கலாம் என்பதால்தான் ஒப்புக்கொண்டேன். பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களை  நீக்கியதில் எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் உண்டு.  அவர்களை நீக்கியதற்குப் பதில் இடைநீக்கம் செய்திருக்கலாம். ஸ்லீப்பர் செல் என்கிற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை. நான் சுதந்திரமாக முடிவெடுப்பேன். என் முடிவு அம்மா ஆட்சிக்கு ஆதரவாக இருக்கும். டி.டி.வி-யை இணைப்பதற்கான காலம் இன்றைக்கு வரவில்லை. அப்படி ஒரு சூழல் வரும்போது, என்னைப் போன்றோர் இணைக்க முன் நிற்போம்” என்றார்.

அதிமுக-வை கடுமையாக விமர்சித்த அவர், “இந்த இரட்டைத் தலைமையிடம் கெஞ்சித் தான்” திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு சீட் கொடுத்தவுடன் தலைமை நல்ல தலைமையாகிவிட்டதா? எனக் கேள்வியெழுப்பும் அதிமுகவினர். இவர் “திருப்பரங்குன்றத்தில் பாஸாவது கடினம்” தான் என்கின்றனர்.

;