election2021

img

கேள்விக்குறியானது கமலின் நேர்மைப் பேச்சு....

திருப்பூரைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் ‘அனிதா டெக்ஸ்காட்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2019 ஆம் ஆண்டுமக்கள் நீதி மய்யத்தின் மாநிலப்பொருளாளராக இவர் நியமிக்கப் பட்டார். இந்நிலையில், இவருடைய நிறுவனம் மற்றும் வீடுகளில், கடந்த இரு தினங்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், ஆவணங்கள், ரொக்கப் பணம் கைப்பற்றபட்டுள்ளதாக கூறப்பட்டாலும், முழு விபரங்கள் தெரியவில்லை. தனதுகட்சியின் மாநிலப் பொருளாளரி டம் வருமான வரித் துறை சோதனைநடத்திய இரண்டாவது நாளில், திருப்பூரில் வியாழனன்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் சாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், மற்ற கட்சிகளிடம் இல்லாதது, தன்னிடம் இருப்பது “நேர்மை” என்று முழங்கினார். ஆனால், நேர்மையான தனது கட்சியின் மாநிலப் பொருளாளர் வீட்டிலேயே வருமான வரித் துறை சோதனை நடத்துவது பற்றி மறந்தும் ஒரு வார்த்தை கூட அவர்
பேசவில்லை.

இந்த பேச்சின்போது, மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் சமையல் எரிவாயுவிலை உயர்வு ஆகிய பிரச்சனை களை வழக்கமான தனது புரியாதபேச்சில் விமர்சித்துப் பேசினார். ஆனால், தேர்தல் சமயத்தில் மத்திய அரசின் வருமான வரித்துறை இந்த சோதனை நடத்துவது ஏன் என்று கேள்வியைக்கூட அவர் எழுப்பவில்லை.இதற்கிடையே வருமான வரித்துறை சோதனையில், சந்திரசேகரன் நிறுவனத்திடம் இருந்து,தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைகடந்த மூன்றாண்டு காலத்தில் ரூ.450 கோடி மதிப்பில் பொருட்களை கொள்முதல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. மத்திய பாஜக அரசுக்குஇதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதுடன், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கி இருப்பதை வாய்ப்பாகக் கொண்டு இந்த சோதனை நடத்தியிருப்பது தெரிகிறது.

கமல்ஹாசன் பேசும் மேடைகளில் எல்லாம், தான் மிகச்சரியாகவரி செலுத்துவதை, பெருமை யாகச் சொல்லி வருகிறார். நேர்மைச்குச் சான்றாக அவர் முழங்கினாலும், அவருடைய கட்சியின் நிர்வாகியே வரி ஏய்ப்புப் புகாரில் சிக்கியிருப்பதால் அவரது நேர்மைப் பேச்சு கேள்விக்குறியாகி உள்ளது பொதுமக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

;