election2021

img

புஸ்வாணமான எடப்பாடியார் கூட்டம்....

“இழவெடுத்தவ, அவ  பேச்ச கேட்டு வந்தது தப்பா போச்சு. ஆமாங்கரேன்,  இவன்  வேற நைநைன்னு உசிர எடுக்குறான்.  ஒரு ரொட்டிப் பாக்கெட்டு வாங்கலாமுன்னா, ஒரு கடைய கூட காணோ. மூடிப்புட்டா னுவ. அடுத்த தடவ எடப்பாடியார் வாரார்,  அவர் வாரார், இவர் வாரார்னு சொல்லிக் கூப்பிடட்டும் வச்சிக்கிறேன்.”கையில் 2வயது மகனோடு பிற்பகல் 3 மணியிலிருந்து ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்க  அருகில் கடையில்லாமல் அல்லாடிக் கொண்டிருந்த ஒருகிராமத்துப் பெண்ணின் பகிரங்கமான  அங்க லாய்ப்புதான் இது.  எடப்பாடியார் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் புதன்கிழமை மாலை பேசப்போகிறார் என மன்னார்குடி தொகுதி முழுவதும் ஒலிபெருக்கி  பிரச்சாரங்கள் கன ஜோராய் நடத்தப்பட்டன.புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கே பெருமாள் கோயில் கோடைத்திருவிழா நேரத்திலும் மேலராஜ வீதி பொதுப் போக்குவரத்து காவல்துறையால் மூடப்பட்டது. மக்களின் பொதுப் போக்குவரத்து பல திசைகளிலும் திருப்பிவிடப்பட்டது.   மேலராஜவீதியில் பெரும்பாலான  கடைகள் மூடிக்கிடந்தன. முகூர்த்த நேரத்தில், திருவிழா சமயத்தில் இப்படி பொழப்பில மண்ணை அள்ளிப்போட்டா  என்ன பண்றது என்றார் ஒரு வர்த்தகர்.

மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் எடப்பாடியார் பேசுகிறார் என சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து  டெம்போக்கள், வேன்களில் திரட்டிக் கொண்டு வரப்பட்ட பெண்கள் குழந்தைகளோடு  பிற்பகல்  இரண்டரை மூன்று  மணியிலிருந்து மேலராஜவீதி நெடுகிலும் கயிறு கட்டப்பட்ட நேர் லைனில் விட்டு விட்டு  காத்திருந்தனர்.  எல்லோர் முகங்களிலும் ஐந்தரை ஆறு மணி நேரத்திற்கு மேலாககாத்திருந்ததன் களைப்பும் ஏமாற்ற மும் தெரிந்தது.

குழந்தைகளை வைத்துக் கொண்டு திண்டாடிய பெண்கள் இருப்புக் கொள்ளாமல்  தவித்ததைபார்க்க முடிந்தது. வந்த  பெண்களில் ஒரு சாரார் காத்திருந்து காத்திருந்து  கடுப்பாகி, கிடைத்ததை கட்சி ஏஜெண்டுகளிடம் வாங்கிக் கொண்டு வந்த வேன்களுக்கு திரும்பாமல் பாதியிலே பேருந்தில் ஊர் திரும்பிவிட்டதாக  வெளிப்படையாக பேசிக்கொண்டனர்.பேண்டு செட் ஒரு பக்கமும்பாலக்காடு செண்டை மேளக்குழு வினரின்  இடி முழக்கம் மற்றொரு பக்கமும்   என நாலா திசைகளி லும்  பணம் தண்ணீராய் வாரி யிறைக்கப்பட்டிருந்தது. பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலைகள்  விஷம் போல ஏறிக் கொண்டிருக்கும் நேரத்திலும்   கெயில் குழாய்கள் வயல் பகுதிகளில் நெளிந்து கொண்டிருக்கும்  வேளையிலும்   வேளாண் விரோத மோடி சட்டங்களுக்கு   ஜால்ரா அடித்த  எடப்பாடியாரை  கொஞ்சமும் கூச்சமின்றி, ‘வேளாண் மண்டல பாதுகாவலர்’ என்று  ஹை வாட் ஒலிபெருக்கிகள் வாயிலாக எடப்பாடியார் சாதனைகளைப் பற்றிய பொய் பில்டப் அளப்பறைகள் அள்ளி விடப்பட்டு  கேட்பவர்கள் செவிப்பறைகளை கிழித்துக் கொண்டிருந்தன.  ஆனால் கூட்டம்தான் எதிர்பார்த்ததைபோல இல்லாமல் புஸ்வாணமாகிப் போனது.

காலையில்தான் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடி தாமரைகுளம் மேல்கரையில் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற பிஎம்எம் திருமணஅரங்கும் நிறைந்து வழிந்து பக்கத்து லேஅவுட்டும் நிரம்பி குளத்தின் மேல்கரை முழுவதும் கூட்டத்தால்  திணறி தாலுக்கா அலுவலக சாலையிலும் மேலராஜவீதி முழுவதும் கூட்டணி தொண்டர்களே காட்சி தந்தனர். ஒரு கட்டத்தில் கூட்டணி தொண்டர்கள் எண்ணிக்கை சமார் ஐந்தாயிரத்தை தாண்டியது. அந்த செயல்வீரர்களிடம் தென்பட்ட உற்சாகமும் எழுச்சியும் மாலையில் எடப்பாடியாருக்கு திரட்டப்பட்ட இல்லை  என்ற வித்தியாசம்  பளிச்சென தெரிந்தது. டிஆர்பி ராஜாதான் மன்னார்குடியில் மீண்டும் மூன்றாம் முறையாக ஜெயித்து ஹாட்ரிக் அடிக்கப் போகிறார் என்ற உண்மை அதிமுக தொண்டர்களில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வேண்டும். எடப்பாடியார் கூட்டத்திற்கு  வந்த பெரும்பாலான அதிமுக தொண்டர்கள்  முகங்களி லும் உற்சாகமில்லை. எடப்படியார் ஏழரை மணிக்கு வழக்கம் போல் பேசினார். தளர்ந்து போன அதிமுக கூட்டணி பிரச்சாரகர்களை தூக்கி நிறுத்த பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்.மன்னார்குடி சட்டமன்ற தொகுதிநமக்கே என்ற நம்பிக்கையும் தெளிவும் மதச்சார்பற்றகொள்கையில் திரண்ட ’கூட்டணிக்கே உரித்தான கம்பீரமும் பெருமிதமும் ததும்ப திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற கூட்டணித் கட்சித் தொண்டர்கள் பம்பரமாய்ச் சுற்றி சுழன்று பணியாற்றி வருகின்றனர்.

                                    ************

இவர் என்ன எம்ஜிஆரா? ரூ.200-க்கு இதுவே அதிகம்....!

அதிமுக நன்னிலம் தொகுதி வேட்பாளர் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜை ஆதரித்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடவாசல் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரக் கூட்டத்திற்கு குடவாசல் பகுதி மட்டும் இல்லாமல் நன்னிலம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து அழைத்து வந்த அதிமுக தொண்டர்கள், முதல்வர் வருகைக்காக மதியம் 3 மணியிலிருந்து 5 மணி வரை காத்திருந்தனர். 5.40 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்து பிரச்சாரத்தை துவக்கினார். பிரச்சாரம் துவங்கிய சிறிது நேரத்திலேயே, முதலமைச்சர் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண்கள் மற்றும் ஆண்கள் சாரைசாரையாக கூட்டத்தை விட்டு கலைந்து சென்றனர். கலைந்து சென்ற மக்களிடம், என்ன முதலமைச்சர் பேசிக் கொண்டிருக்கிறார்.. நீங்கள் கலைந்து செல்கிறீர்களே... என்று கேட்டதற்கு, எடப்பாடி “யார்” என்ன எம்ஜிஆரா..? அவர்கள் கொடுத்த 200 ரூபாய்க்கு இதுவே அதிகம் என்று சாதாரணமாக கூறிவிட்டு கடந்து சென்றனர்.

தொகுப்பு : மன்னை சத்யா

;