election2021

img

தமிழகத்தின் நிதி நிலையை படுகுழியில் தள்ளிய இபிஎஸ்-ஓபிஎஸ் ஆட்சி.....

இ.பி.எஸ்- ஓ.பி.எஸ். இரட்டை தலைமை தமிழகத்தின் நிதி நிலையை சீரழித்துவிட்டது. இதனை கீழ்கண்ட விவரங்கள் தெளிவாக்குகின்றன:

ஆட்சி                                                           ஆண்டு                     கடன்தொகை/கோடி ரூ.

தி.மு.க.                                                          2011                                   1,01,439

ஜெயலலிதா ஆட்சி                                    2016                                   2,47,031

இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமை ஆட்சி       2021                                 4,98,000

# 2021-22 நிதியாண்டில் இந்த கடன் 5,70,000 கோடியாக அதிகரிக்கும் என இரட்டைத்தலைமையின் பட்ஜெட் அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது தமிழகத்தில் உள்ள புதியதாக பிறக்கும் குழந்தை உட்பட, ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.60,000 கடன் சுமத்தப்பட்டுள்ளது.

# ஒரு மாநில அரசாங்கம் கடன் வாங்குவது தவறல்ல; ஆனால் கடன் எதற்காக என்பதுதான் கேள்வி! தொழில் வளர்ச்சிக்கோ அல்லது விவசாய வளர்ச்சிக்கோ அல்லது கோவிட்19 போன்ற காலங்களில் மக்களுக்கு உதவிடவோ இந்த கடன் பயன்படுத்தப்படவில்லை. 

வருவாய் பற்றாக்குறையும் இரட்டைத் தலைமை ஆட்சியில் செங்குத்தாக உயர்ந்துள்ளது:

 ஆட்சி                                            ஆண்டு                          வருவாய்/ரூ.கோடி

தி.மு.க.                                            2011                                   +2,386 கோடி

ஜெயலலிதா ஆட்சி                      2016                                 -17,057 கோடி

இபிஎஸ் - ஓபிஎஸ் ஆட்சி           2021                               -1,31,000 கோடி

#    கடந்த 8 ஆண்டுகளில் தமிழக அரசாங்கம் தான் வாங்கிய கடனுக்கு வட்டியாக மட்டும் ரூ.1,89, 872 கோடி கட்டியுள்ளது.

#    வட்டிக்காக கொடுத்த இந்த பணத்தில்

#    தரமான 500 மருத்துவ கல்லூரிகளை கட்டலாம்.

#    தரமான 1200 பொறியியல் கல்லூரிகளை கட்டலாம்.

#    தரமான 6000 உயர்நிலை பள்ளிகளை உருவாக்கலாம்.

#    50க்கும் அதிகமான BHEL/NLC போன்ற ஆலைகளை உருவாக்கி ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வழங்கலாம்!

#  10 லட்சம் வீடுகளை கட்டி ஏழைகளுக்கு தரலாம்!

வருவாயின் கணிசமான பகுதியை வட்டிக்கு மட்டுமே தரவேண்டிய  அவலத்தை இ.பி.எஸ்- ஓ.பி.எஸ். ஆட்சி உருவாக்கியுள்ளது.

# கடன் சுமை/வருவாய் பற்றாக்குறை/ வட்டி சுமை என       தமிழகத்தின் நிதிநிலைமை படுகுழியில் வீழ்ந்துள்ளது.

# தமிழகத்தின் நிதி நிலைமையை சிதைத்த இபிஎஸ்  - ஓபிஎஸ் ஆட்சியை வீழ்த்துவோம்!

# ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம்! 

# தமிழகத்தின் நிதி மேன்மையை நிலை நாட்டுவோம்!

அ. அன்வர் உசேன்

;