election2021

img

தமிழ் மொழியின் காவலரா பிரதமர் மோடி? சமஸ்கிருதத்திற்கு ரூ.643 கோடி; தமிழுக்கு ரூ.29 கோடி.... ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி....

புதுக்கோட்டை
சமஸ்கிருதத்திற்கு ரூ.643 கோடி ஒதுக்கியநிலையில் தமிழுக்கு வெறும் ரூ.29 கோடி மட்டுமேஒதுக்கிய மோடி, தமிழின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பவரா எனக் கேள்வி எழுப்பினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுஉறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன். தேர்தல் பிரச்சாரத்திற்காக புதுக்கோட்டை வந்திருந்த அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது:

‘ஒப்பந்த விவசாயச் சட்டம்’ மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களில் ஒன்று. ஏற்கனவே, கரும்பு விவசாயிகள் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தோடு இப்படிஒப்பந்தம் போட்டுத்தான் விவசாயம் செய்தனர். அப்படி ஒப்பந்தம் போட்ட விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ. 23 ஆயிரம் கோடி. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் ரூ.13,000 கோடியும், தமிழகத்தில் ரூ.3000 கோடியும் ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்குத் தர வேண்டியுள்ளது. 

இந்நிலையில், ஒப்பந்த விவசாயச் சட்டம்எந்த வகையில் விவசாயிகளுக்குப் பலனளிக்கும்.இது முழுக்க, முழுக்க தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட சட்டம். இப்படி சட்டமியற்றிவிட்டு திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினால் மட்டும் விவசாயிகள் பலன்பெற்று விடுவார்களா?பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழ்மொழியின் மீதான பாசம் பொங்கி வழிகிறது. தமிழகத்தின் மொழி மற்றும்கலாச்சாரத்தை பாதுகாக்க உறுதி கொண்டிருக்கிறோம் என பிரதமர் மோடி தாராபுரத்தில் பேசியிருக்கிறார். இது உலகமகா நடிப்பு. நாட்டில்99.9 சதவீதம் மக்கள் பேசாத சமஸ்கிருத மொழிவளர்ச்சிக்கு மோடி அரசு 643 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதே நேரத்தில் உலகம் முழுவதும் 7.5 கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் தமிழ்மொழிக்கு வெறும் ரூ.29 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. 

தமிழகத்தில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனங்கள் படிப்படியாக இந்தி மயமாக்கப்பட்டு வருகின்றன. அங்கே, தமிழுக்கு உரிய இடம் தரப்படுவதில்லை. தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அரசு அனுப்பும் கடிதங்கள்கூட இந்தியிலேயே வருகிறது. இப்படிபல்வேறு வகைகளில் தமிழையும், தமிழர்களையும் வஞ்சித்துவிட்டு, இப்போது ஓட்டுக்காக பிரதமர் மோடி பொய் பேசி வருகிறார். தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பது போல் நடிக்கிறார்.தமிழக மக்க அதிமுக-பாஜக கூட்டணிக்கு சரியான பாடம்  புகட்டுவார்கள். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

;