election2021

img

அஞ்சல் வாக்கு... (தேர்தல் நேர கவிதை)

தேர்தல் பணி முக்கியம்
அஞ்சல் வாக்கு     
அதனினும் முக்கியம்
முன்னது கடமை
பின்னது உரிமை

கடமையில் கண்ணாயிருந்து 
உரிமையில் கோட்டை விடுதல்
கோட்டைக்குக் கேட்டைத் தருதல்

தும்பை விட்டு
வால் பிடித்தல்
வம்பை மீண்டும் 
விலைக்கு வாங்குதல்

அஞ்சல் வாக்கு
சிவப்பு நாடாத் தன்மையது
கொஞ்சம் கவனப் பிசகும்
வஞ்சம் தீர்க்க வாய்ப்பு விலகும்

அட்சரம் பிசகாமல்
அஞ்சல் வாக்கை
முறையாய் செலுத்துதல் நன்று
அதுவே முத்திரையாகும் வென்று

உமது வாக்கு மட்டுமே இலக்கன்று
சுற்றமும் நட்பும் 
இல்ல நிகழ்ச்சிகளுக்கு மட்டுமன்று
அல்லக் கைகளின் ஆட்சிக்கு முடிவு
சுற்றமும் நட்பும் சேர்ந்தாலே
கிட்டும் விடிவு

பகை முடிக்கும் பணி 
2004ல், 2006ல் முடிந்தது
2011ல் 2016ல் காத்த அசிரத்தை
2021ல் கூட்டியது சிரத்தை

செல்லாத வாக்கு
இல்லாமலாகட்டும்
பொல்லாத ஆட்சிக்கு
முடிவுரை எழுதட்டும்
ஒன்றுகூட விடாமல் செலுத்துவோம் வாக்கு
நன்று கூடும் மாற்றம் வெல்லுவோம் நோக்கு

கவிதையாளர் : பெரணமல்லூர் சேகரன் 

;