election2021

img

எதிர்க்கட்சிகளே உஷார்....

கூட்டணி தொகுதி பங்கீடு உடன்பாடு பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறத்தில் ஆளுங்கட்சியினரும் அவர்களது கூட்டாளிகளும் அதிகார வர்க்கத்தை முற்றிலும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி உள்வேலைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

“இந்த முறை அரசியல் கட்சிகள், அனைத்து அரசு வாகனங்களையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறை வாகனங்களை அவசியம் கவனியுங்கள். ஏனென்றால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே ஏராளமான அதிகாரிகளை இடமாற்றம் செய்வார்கள். ஆனால் தமிழகத்தில் இப்போது வரை எந்த அதிகாரியும் தேர்தலையொட்டி இடமாற்றம் செய்யப்படவில்லை. இதன்பொருள் என்னவென்றால், ஆங்காங்கே உள்ள அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு உதவ வேண்டும் என்று கடுமையாக நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டு வருகிறது என்பதுதான். அவர்களது உதவியுடன் அரசு வாகனங்களிலேயே பணம் கீழே வரை வெள்ளமெனப் பாயப்போகிறது. போலீஸ் வாகனங்களையும் அரசு வாகனங்களையும் போலீசும் அதிகாரிகளும் கண்காணிக்கப்போவதில்லை. எனவே எதிர்க்கட்சிகளே உஷார்” என்று அரசு வட்டாரங்களின் தகவல் அறிந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

;